புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2014

1,61,011வாக்குகள் செல்லாதவை.மக்களுக்கு வாக்களிப்பு  பற்றிய அறிவு போதாது ஆளும் கட்சிக்கு 17 ஆசனங்கள் ஐதேகவுக்கு 2 ஆசனங்கள் இழப்பு 
2009 ம் ஆண்டு நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களின், எண்ணிக்கையில் 17 குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 2 குறைந்துள்ளது.
இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்களில், வாக்களிப்பதற்கு 58 லட்சத்து 98 ஆயிரத்து 428 பேர் தகுதி பெற்றிருந்தனர்.
அதில் 39 லட்சத்து 21 ஆயிரத்து 612 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.  19 லட்சத்து 76 ஆயிரத்து 810 பேர் வாக்களிக்கவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 11 வாக்குகள் செல்லுபடியற்றதாகும்.
கடந்த முறை நடைபெற்ற மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 247103 வாக்குகள் குறைந்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 47000 வாக்குகள் அதிகரித்துள்ளன.
இதேவேளை, தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட 1333 வேட்பாளர்கள் கட்டுப்பணமாக 26 லட்சத்து 60 ஆயிரம் ரூபா அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த முறை இவ்விரு மாகாணங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் மொத்தமாக 6 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட ஜேவிபி இம்முறை 11 உறுப்பினர்களை பெற்றுள்ளது.
அத்துடன், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக வருவதற்குரிய வாய்ப்புகள் தென்படுவதாகவே முடிவுகள் காட்டுகின்றன.
எனினும், ஆளும் கூட்டணியின் செல்வாக்கு தற்போது சரிவைக் கண்டுள்ளதாகவே தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ad

ad