புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

கனடாவில் ஜனவரி மாதம் 'தமிழ் மரபுத் திங்கள்' - ஒன்றாரியோ மாநில அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது

ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கும் சட்டமூலம் ஒன்ராறியோ சட்டசபையில் 17-03-2014 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. கனடாவின் ஒன்ராறியோ சட்டசபையில் 'தமிழ் மரபுத் திங்கள்' மூன்று கட்சிகளாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதானது கனடியத் தமிழரோடு உலகெங்கும் வாழும் தமிழர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாநில அரசொன்று தமிழ் மரபுத் திங்களை அரசுமுறையில் ஏற்றுக்கொண்டது இதுவே முதன் முறையாகும்.

Tamil Heritage Month Act, 2014 எனக் குறிப்பிடப்படும் ஒன்ராறியோ சட்டசபையின் Bill 156 எனும் இச் சட்டமானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தை ஒன்ராறியோ முழுவதும் தமிழ் மரபுடமை மாதமாக கடைப்பிடிக்க 'Bill 156 - Tamil Heritage Month Act, 2014' சட்டபூர்வமான அனுமதி தந்துள்ளது.

ஓன்ராறியோவின் எல்லாச்சட்டங்களையும்போலவே இதற்கும் மகாராணியின் நிறைவேற்று ஒப்புதல் கிடைத்ததும் உடனடியாக சட்டம் நடைமுறைக்கு வரும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் ஒன்ராறியோ பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், மற்றும் ஏனைய பல உறுப்பினர்களும் சட்டசபையில் பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருந்த பகுதிக்கு எழுந்து வந்து அங்கு அமர்திருந்த தமிழர் பிரதிநிதிகளுடன் சட்டசபை பாரம்பரியங்களுக்கு அமைய கைகுலுக்கி பெரு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ad

ad