புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014

ஜெனீவ வரை ஒலித்த பிரச்சினையால் பூஸாவில் தடுப்புக் காவலில் தர்மபுரத்தில் கைதான தாய்18 நாள்கள் வைத்திருக்க உத்தரவு: அவரது 13 வயது மகள் விடுவிப்பு 
கிளிநொச்சி, தர்மபுரத்தில் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தாயாரான பா.ஜெயகுமாரிக்குப் பாதுகாப்பு அமைச்சினால் 18 நாள்கள் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை பூஸா சிறைக்கு அனுப்ப உள்ள தாகப் பொலிஸார் நேற்று கிளிநொச்சி  பதில் நீதிவான் எஸ். சிவ பாலசுப்பிரமணியத்திடம் தெரிவித்தனர்.
13 வயதே நிரம்பிய அவரது மகள் விபூசி காவை, சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக வைத்துப் பராம ரிக்குமாறும் சிறுவர் நன்ன டத்தை அதிகாரிக்கு பதில் நீதி வான் உத்தரவிட்டார்.
தாம் சந்தேகநபர் ஒருவரைத் தேடிச் சென்ற சமயம் அவர் ஜெயகுமாரியின் வீட்டில் இருந்து பொலிஸாரைச் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் வீட்டில் வசித்து வந்த தாயாரையும், அவரது மகளை யும் தாம் கைது செய்தனர் என்றும் பொலிஸார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 
நேற்றுமுன்தினம் மாலை 4 மணி முதல் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் அவர்களது வீட்டில வைத்துத் துருவித் துருவி விசாரிக்கப்பட்ட ஜெயகுமாரியும் விபூசிகாவும் இரவு கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன் னிலைப்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெறப்பட்டது. 
அதன் பின்னர் நேற்றிரவு 9.00 மணியளவில் அவர் கள் கிளிநொச்சிக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு நேற்று பி.ப. 3 மணியளவில் தாயையும், மகளையும் முற்படுத்தப்போவதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்திருந்த போதும் இரவே அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
நீதிவான் முன்னலையில் ஜெயக்குமாரி அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்ததாவது:
சம்பவம் இடம்பெற்ற அன்று பி.ப 3.30 மணியளவில், எனது பிள்ளைக்கு உணவூட்டிக் கொண்டிருந்தேன். அப் போது உயரமான ஒருவர் கறுப்பு நிற ஜக்கெட்டுடன் வீட் டுச் சுவருக்கு மேலாக ஏறிப் பாய்ந்து உள்ளே வந்தார்.
உடனேயே நான் எனது மகளைக் கூட்டிக் கொண்டு வீட் டுக் கேற்றுக்கு வெளியில் வந்தேன். அப்போது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வாகனத்துடன் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் எனது பெயரைச் சொல்லாமல் எனது பெயர் போன்ற வேறு ஒரு பெயர் சொல்லி அவரின் வீடு இதுவா என்று கேட்டனர். 
அதற்கு நான் பதில் சொல்வதற்கிடையில், எனது பெயரைச் சொல்லி அவரது வீடு இதுவா என்று கேட்க, குறித்த பெயருக்கு உரியவர் நான் தான் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். உட னேயே வாகனத்துக்கு அருகில் எங்களை இருத்தி விட்டு, அவர்கள் வீட்டினுள் சென்றனர். 
அவர்கள் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டது. அதன் பின்னர் பெருமளவான பொலிஸாரும், இரா ணுவத்தினரும் வந்து எங்களை விசாரித்தனர். மதிலேறிக் குதித்து வந்த நபரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது - என்றார். 
அதேபோன்று மகளும், மதில் ஏறிக் குறித்த நபரைத் தனக்குத் தெரியாதென்று பதில் நீதிவான் முன்பாகத் தெரிவித்தார். 
ஜெயகுமாரிக்கு எதிராகப் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள "பி' அறிக்கையில், குறித்த வீட்டில் வெடி பொருள்களை இனங்காணும் கருவி, துண்டுபிரசுரங்கள் காணப்பட்டன என்றும் அங்கேயே துப்பாக்கிச்சூடு நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 
பூஸா தடுப்புக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள ஜெயகுமாரியின் மூன்றாவது மகன் போரின் போது காணாமற் போயிருந்தார். இதனால் காணாமற்போனோர் தொடர்பில் நடத்தப்படும் எல்லாப் போராட்டங்களிலும், எஞ்சியிருக்கும் தனது ஒரே மகளுடன்  கலந்துகொள்வார். போராட்டங்களில் பிஞ்சுக் குழந்தை கதறி அழுவதால் ஊடகங்களின் பார்வை அவர்களின் மீது குவிந்தது.
சனல் - 4 உள்  ளிட்ட பல சர்வதேச ஊடகங்களுக்கு, காணாமற்போனவர்களின் உறவினர்களது துயரங்களை அவர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.  
சிறுமி விபூசிகா அண்மையிலேயே பூப்பெய்தியிருந்தார். பொலிஸாரின் அறிக்கையில் இந்த விடயமும் குறிப்பிடப் பட்டுள்ளது

ad

ad