புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

ஷியாவுடன் கிரிமியா இணைவதா அல்லது 1992–ம் ஆண்டைய கிரிமிய அரசியல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு பொது வாக்கெடுப்பு நடக்கிறது. 
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகளவில் வசித்து வருகிறார்கள்.கிரிமியா பாராளுமன்றம், உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கடந்த 11–ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா வரவேற்றது. ஆனால் அமெரிக்கா ஏற்க வில்லை.

இந்த நிலையில், ரஷியாவுடன் கிரிமியா இணைவதா அல்லது 1992–ம் ஆண்டைய கிரிமிய அரசியல் சட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதா என்பது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அங்கு பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் 20 லட்சம் பேர் பங்கேற்று வாக்களிக்கிறார்கள்.இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் இடைக்கால அரசு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கடைசி முயற்சியாக லண்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ்வும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வி அடைந்தது.எனவே திட்டமிட்டபடி இன்று கிரிமியாவில் பொதுவாக்கெடுப்பு நடக்கிறது. இந்தப் பொதுவாக்கெடுப்பின் முடிவை ஏற்று மதிப்போம் என ரஷியா அறிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவ மந்திரி ஜான் கெர்ரியோ, ‘‘பொது வாக்கெடுப்பின் முடிவுகளை நாங்களும், மேற்கத்திய நாடுகளும் ஏற்கமாட்டோம். கிரிமியாவில் ரஷியா தனது படைகளை கூடுதலாக நிறுத்தி வருவது கவலை அளிக்கிற அம்சமாக அமைந்துள்ளது’’ என கூறினார்.
 

ad

ad