புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014


பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: ஆஸ்திரேலிய அணி 2–வது தோல்வி அரைஇறுதி வாய்ப்பு மங்கியது

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது.

உலக கோப்பை கிரிக்கெட்
வங்காளதேசத்தில் நடந்து வரும் 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் சூப்பர்–10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப் 2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் மிர்புரில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசும், ஆஸ்திரேலியாவும் (குரூப்2) பலப்பரீட்சை நடத்தின. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக பிராட் ஹாக், நாதன் கவுல்டர் நிலே நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேம்ஸ் பவுல்க்னெர், ஜேம்ஸ் முயர்ஹெட் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலியா 178 ரன்
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் முதல் ஓவரிலேயே ஒரு சிக்சர், 2 பவுண்டரியுடன் அட்டகாசமாக ஆரம்பித்த போதிலும், அதன் பிறகு சீரான இடைவெளியில் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. பிஞ்ச் 16 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 20 ரன்னிலும் (14 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்தில் கிளீன் போல்டு ஆனார்கள்.
இதன் பின்னர் நடுவரிசையில் மேக்ஸ்வெல்லும் (45 ரன், 22 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பிராட் ஹாட்ஜிம் (35 ரன், 26 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) துரிதமாக ஆடி அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் மட்டும் (4 ஓவரில் 19 ரன்) கட்டுக்கோப்பாக சிக்கனமாக பந்து வீசினார்.
கெய்ல் அரைசதம்
அடுத்து கடின இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித்தும், கிறிஸ் கெய்லும் களம் புகுந்தனர். மறுபடியும் தாக்குதல் பாணியை கடைபிடித்த கிறிஸ் கெய்ல், மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஒவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை ஓட விட்டார். இந்த ஜோடி 5 ஓவர்களில் 50 ரன்கள் திரட்டி வலுவான தொடக்கம் தந்தது. சுமித் 17 ரன்னில் (19 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். கெய்ல் தனது பங்குக்கு 53 ரன்கள் (35 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசிய நிலையில் ஆட்டம் இழந்தார். லென்டி சிமோன்ஸ் (26 ரன்), சாமுவேல்ஸ் (12 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
இறுதி கட்டத்தில் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. வெய்ன் பிராவோவும், கேப்டன் டேரன் சேமியும் கைகோர்த்து, நெருக்கடியை திறம்பட சமாளித்தனர். கடைசி 2 ஓவரில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. 19–வது ஓவரை வீசிய ஸ்டார்க்கின் பந்து வீச்சில் சேமி 6, 2, 4, 2, 4, 1 என்று 19 ரன்கள் நொறுக்கி ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார்.
சிக்சருடன் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இதையடுத்து கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. 20–வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பவுல்கெர் வீசினார். முதல் இரு பந்துகளை வீணாக்கிய டேரன் சேமி அடுத்த இரு பந்துகளையும் சிக்சராக்கி, ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் அதிகபட்சமாக ‘சேசிங்’ இதுவாகும். டேரன் சேமி 34 ரன்களுடனும் (13 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), பிராவோ 27 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றனர். டேரன் சேமி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
3–வது ஆட்டத்தில் ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு இது 2–வது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றிருந்த ஆஸ்திரேலியாவுக்கு இது 2–வது தோல்வியாகும். இதனால் ஆஸ்திரேலியாவின் அரைஇறுதி வாய்ப்பு மங்கி போய் விட்டது. சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால், ஒரு வேளை ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதி வாய்ப்பு உருவாகலாம்.
ஸ்கோர் போர்டு
ஆஸ்திரேலியா
பிஞ்ச் (பி) சாமுவேல்ஸ் 16
வார்னர் (பி) பத்ரீ 20
வாட்சன் (ஸ்டம்பிங்) ராம்டின் (பி) நரின் 2
மேக்ஸ்வெல் (சி) பிராவோ (பி) பத்ரீ 45
ஜார்ஜ் பெய்லி (சி) சேமி (பி) சாமுவேல்ஸ் 12
பிராட் ஹாட்ஜ் (பி) சுனில் நரின் 35
பவுல்க்னெர்(சி) பிராவோ (பி) சான்டோகி 13
பிராட் ஹேடின் (நாட்–அவுட்) 15
ஸ்டார்க் (சி) ரஸ்செல் (பி) பிராவோ 4
முயர்ஹெட் (நாட்–அவுட்) 1
எக்ஸ்டிரா 15
மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 178
விக்கெட் வீழ்ச்சி: 1–33, 2–41, 3–41, 4–77, 5–100, 6–152, 7–154, 8–171
பந்து வீச்சு விவரம்
சான்டோகி 4–0–30–1
பத்ரீ 4–0–37–2
சாமுவேல்ஸ் 2–0–20–2
சுனில் நரின் 4–1–19–2
டேரன் சேமி 1–0–16–0
பிராவோ 4–0–39–1
ஆந்த்ரே ரஸ்செல் 1–0–15–0
வெஸ்ட் இண்டீஸ்
வெய்ன் சுமித் (சி) ஹேடின் (பி) ஸ்டார்க் 17
கெய்ல் (சி) மேக்ஸ்வெல் (பி) முயர்ஹெட் 53
சிமோன்ஸ் (சி) மேக்ஸ்வெல் (பி) போலிஞ்சர் 26
சாமுவேல்ஸ் (சி) ஹேடின் (பி) ஸ்டார்க் 12
வெய்ன் பிராவோ (நாட்–அவுட்) 27
டேரன் சேமி (நாட்–அவுட்) 34
எக்ஸ்டிரா 10
மொத்தம் (19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு) 179
விக்கெட் வீழ்ச்சி: 1–50, 2–101, 3–107, 4–130
பந்து வீச்சு விவரம்
வாட்சன் 2–1–11–0
ஸ்டார்க் 4–0–50–2
போலிஞ்சர் 4–0–34–1
மேக்ஸ்வெல் 3–0–28–0
பவுல்க்னெர் 3.4–0–27–0
முயர்ஹெட் 3–0–21–1

ad

ad