புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014

டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை!
புதுடெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில்,  2 பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த மாணவி 2012 டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார்.


இந்த வழக்கில், அக்‌ஷய், வினய், பவன், முகேஷ் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் கடந்த வாரம் உறுதிப்படுத்தியது.
இந்நிலையில், தூக்குத் தண்டனையை எதிர்த்து முகேஷ், பவன் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அவர்களின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை முகேஷ் மற்றும் பவனை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

ad

ad