புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

இலங்கை–தென்ஆப்பிரிக்கா (குரூப்1)
இடம்: சிட்டகாங், நேரம்: மாலை 3 மணி
தரவரிசை
1 4

கேப்டன்கள்
தினேஷ் சன்டிமால் டு பிளிஸ்சிஸ்
நட்சத்திர வீரர்கள்
சங்கக்கரா, தில்ஷன், மேத்யூஸ், அஜந்தா மென்டிஸ், மலிங்கா, செனநாயக்கே.
டிவில்லியர்ஸ், டுமினி, அம்லா, டேவிட் மில்லர், ஸ்டெயின், மோர்கல், தாஹிர்.
இதுவரை நேருக்கு நேர் (4)
வெற்றி 1 வெற்றி 3
20 ஓவர் உலக கோப்பையில் சிறந்த நிலை
இறுதிசுற்று (2009, 2012) அரைஇறுதி (2009)
நம்பர் ஒன் அணியான இலங்கைக்கு, வங்காளதேச சூழல் எல்லாம் அத்துப்பிடி. இங்கு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்வியே சந்திக்காமல் மகுடம் சூடிய இலங்கை அணி, அதே வேகத்தை 20 ஓவர் உலக கோப்பையிலும் காண்பிக்க முயற்சிப்பார்கள். யார்க்கர் மன்னன் மலிங்காவும், சுழல்வாதிகள் அஜந்தா மென்டிஸ், செனநாயக்கே, சதுரங்க டி சில்வா ஆகியோர் தான் இலங்கையின் துருப்பு சீட்டுகள். ‘ஆசிய கிரிக்கெட்டில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எங்கள் பிரிவில் உள்ள அணிகள் சுழற்பந்து வீச்சில் தடுமாறக்கூடியவை. எனவே இங்கு எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் சாதிக்க வாய்ப்புள்ளது’ இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க அணியில் காயப்பிரச்சினை ஆட்டிப்படைக்கிறது. கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இருவரும் தசைப்பிடிப்பால் அவதிப்படுவார்கள். எனவே இந்த ஆட்டத்தில் அவர்கள் ஆடுவது சந்தேகம் தான். போட்டிக்கு முன்பாகத் தான் அவர்கள் களம் இறங்குவார்களா? என்பது உறுதியாக தெரிய வரும். ‘இலங்கை அணி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. சுழற்பந்து வீச்சை நாங்கள் எப்படி எதிர்கொண்டு ஆடப்போகிறோம் எனபதே இந்த ஆட்டத்தில் முக்கியமான விஷயமாகும்’ என்று பிளிஸ்சிஸ் குறிப்பிட்டார். பிளிஸ்சிஸ் ஆடாவிட்டால், டிவில்லியர்ஸ் அணியை வழிநடத்துவார்.
நியூசிலாந்து–இங்கிலாந்து (குரூப்1)
இடம்: சிட்டகாங், நேரம்: இரவு 7 மணி
தரவரிசை
7 8
கேப்டன்கள்
பிரன்டன் மெக்கல்லம் ஸ்டூவர்ட் பிராட்
நட்சத்திர வீரர்கள்
கப்தில், கோரி ஆண்டர்சன், ராஸ் டெய்லர், மெக்லெனஹான், நாதன் மெக்கல்லம், வில்லியம்சன்
மோர்கன், ரவி போபரா, அலெக்ஸ் ஹாலஸ், ஜோர்டான், மைக்கேல் லம்ப், டிரெட்வெல், பெல்
இதுவரை நேருக்கு நேர் (11) முடிவில்லை (1)
3 வெற்றி 7 வெற்றி
20 ஓவர் உலக கோப்பையில் சிறந்த நிலை
அரைஇறுதி (2007), சாம்பியன் (2010)
பயிற்சி ஆட்டங்களில் இரண்டிலும் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. பார்ப்பதற்கு சாதாரண அணி போன்று தெரிந்தாலும் தங்களால் அசத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த அணியின் கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் கால் முட்டி காயத்தால் அவதிப்படுகிறார். ஆனாலும் தொடக்க ஆட்டத்தில் தன்னால் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்த கோரி ஆண்டர்சன், மார்ட்டின் கப்தில், டெய்லர், கேப்டன் மெக்கல்லம் என்று அதிரடிக்கு பிரபலமான வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். இருப்பினும் கடந்த அக்டோபர்–நவம்பர் மாதங்களில் வங்காளதேசத்தில் நடந்த ஒரு நாள் தொடரில் 0–3 என்ற கணக்கில் நியூசிலாந்து தோற்று இருந்தது. எனவே இங்குள்ள ஆடுகளத்தில், சீதோஷ்ண நிலையில் எப்படி ஆட வேண்டும் என்பதை பல்வேறு வகையில் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப நியூசிலாந்து வீரர்கள் தயாராகியுள்ளனர்.
(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

ad

ad