புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

சுவிற்சர்லாந்தில் திருக்கோணேஸ்வரா  நடனாலய மாணவமணிகளின் 20 வது ஆண்டு விழா 

17.03.2014 ஞாயிறன்று சுவிஸ் பேரன் திருக்கோணேஸ்வரா நடனாலயத்தின் 20 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெழ்ற்றுள்ளது சிறந்த பாடகர் சிறப்பான நட்டுவாங்கம்  மிருதங்கம் வயலினிசையு
டன் மாணவமாணவிக ளின்  பரதக்கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முருகன்நடனம் அம்மன்நடனம் ,மகாபாரதம் நாட்டிய நாடகம், இன்னும்பிற  ஆடற்கலை நிகழ்ச்சிகள் அழகுற நிகழ்ந்தன  தமிழியச் சிந்தனைகளுக்கு ஏற்புடைய  அம்மன் நடனம் மிகவும் மக்களை  உணர்ச்சி வசப்படுத்தியது. அணிசேர் கலைஞர்கள்   சந்திரவதனி வியயசுந்தரம் அவர்களைக்கௌரவித்தார்கள்  அதன் போது மாணவிகள் மிருதங்க ஆசிரியருக்கு  பரிசளித்தனர்  அவர் கருத்துரைக்கையில்   இதைவிட பெரிய நல்ல பரிசொன்றை உங்களால் தரமுடியும்  ஆசிரியை மதிவதனி சுதாகரன் நட்டுவாங்கம் பாட சந்திரவதனி ஆசிரியையின் நடனத்தை நாங்கள் காண வேண்டும் என்றார். அதற்கமைய  நிகழ்வு இடம் பெற்றது. மண்டபம்  முழுவதுமே மாணவர்கள் உணர்ச்சி வசப்பட்டு இரசித்தார்கள். மெய்சிலிர்த்த நிலையில்  இருந்தார்கள் என்றும் கூறலாம்.

அதன்பின் இடைவேளையைத் தொடர்ந்து மாணவிகளின் நல்ல முயற்சியொன்று வெளிப்பட்டது. தங்களின் ஆசிரியையின் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள் தங்களுக்கு  இத்தகைய ஆசிரியையை தந்தமைக்காக அதனால் ஆசிரியையின் பழைய கால நினைவலைகளை  மீட்டக்கூடிய காட்சிகளை கணினிதிரை வழியே அமைத்தார்கள் அதற்கான விபரங்களை உணர்வுரீதியாகப் பேசி வெளிப்படுத்தினார்கள். திருமதி கல்லாறு சதீசு  அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிறைகலை என்ற பட்டத்தை வழங்கிக்கௌரவித்தார். சுதாகரன் மதிவதனி இணையர் அவர்களும் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர். பிரதமவிருந்தினராக இங்கிலாந்த நாட்டிலிருந்து  செல்லத்துரை பிரதீசுகுமார்  நாட்டியக்கலைமணி அவர்கள் வருகைதந்திருந்தார். பேர்ண் வள்ளுவன்  பாடசாலை அதிபர்   பொன்னம்பலம் முருகவேள்  ஆசிரியர் அவர்கள் வரவேற்புரையினை  வழங்கினார்.

ad

ad