புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை

5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில் ஆடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்1–ல் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளும், குரூப்2–ல் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேச அணிகளும் இடம் வகிக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இந்த நிலையில், சிட்டகாங்கில் இன்று குரூப் 1 பிரிவில் உள்ள இலங்கையும்  நெதர்லாந்து அணிகளும் மோதின.  கத்துகுட்டி அணியான நெதர்லாந்தை எதிர்பார்த்ததை போலவே இலங்கை ஆரம்பித்தில் இருந்தே தனது சூறாவளி பந்து வீச்சின் மூலம் நிலைகுலையசெய்தது. நெதர்லாந்து அணியில் கூப்பரை(16 ரன்கள்) தவிர,  யாருமே ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. இதனால் அந்த அணி 10.3 ஓவரில் 39 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரு அணி எடுக்கும் குறைந்த ரன்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியில் மேத்யூஸ் மற்றும் மென்டீஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 5 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad