புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

பின்லேடனின் மருமகனும் குற்றவாளி:அமெரிக்க நீதிமன்றில் அதிரடி தீர்ப்பு
news
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி நியூயார்க்கில் 110 மாடி உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பலத்த உயிர் இழப்புக்களையும் பெரும் பொருள் நஷ்டத்தையும் ஏற்படுத்தியவர்  அல்கொயிதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன்.
 
அல்கொயிதா இயக்கத்தின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி பின்லேடனின் மருமகனான சுலைமான் அபு காயித் ‘‘அல்லாவின் நலனுக்காக ஆயிரமாயிரம் இளைஞர்கள் வீரமரணம் அடையத் தயாராக இருக்கிறார்கள் என்றும் விமானங்களை வைத்து தாக்குதல்களை நடத்துவதை நிறுத்த மாட்டோம்’ என்று முரணான கருத்தினை வெளியிட்டிருந்தார்.
 
இவரின் குறித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்  வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுலைமான் அபு காய்த் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளனர்

ad

ad