புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014



சிறுபான்மையினர் யார் பக்கம்  கருத்துக் கணிப்பு 
தேர்தல் 2014 ஸ்பெஷலின் அடுத்த சர்வே இது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினரை மட்டும் மையப்படுத்தி 'சிறுபான்மையினர் நிலை!’ என்ற தலைப்பில் சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். தேர்தல்களில்
சிறுபான்மையினரின் வாக்களிப்பு மாற்றங்களை உண்டாக்கியிருக் கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு, மதவாதம், இட ஒதுக்கீடு, மோடி... என முக்கிய அம்சங்களை உள்ளடக்கி எட்டு கேள்விகளுடன் ஜூ.வி. டீம் சிறுபான்மையினரை சந்தித்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை அடையாளம் கண்டும், மசூதிகளிலும் சர்ச்களிலும் வழிபாட்டுக்கு வந்த சிறுபான்மையினரிடமும் சர்வே எடுத்தோம். ஜூ.வி. எடுத்த சமீபத்திய சர்வேகளிலேயே மிக அதிகமாக 13 ஆயிரத்து 88 பேர் பங்கேற்ற சர்வே இது. சர்வேயின் முடிவுகள் சொல்வது என்ன?

'தமிழகத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு எப்படி?’ என்கிற கேள்விக்கு 'பதற்றத்தோடுதான் வாழ்கிறோம்’ என்று அதிகம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.
'மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளில் இடதுசாரிகள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருக்கிறது. காங்கிரஸ், பி.ஜே.பி. முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு கடைசி இடம்தான்.
  'சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் யாரை நம்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு கருணாநிதிதான் நம்பிக்கை நாயகராகத் திகழ்கிறார். அவருக்கு 42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதிலும் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது இடம்.
  'சிறுபான்மையினரின் முக்கிய எதிரி யார்?’ என்கிற கேள்விக்கு பி.ஜே.பி-தான் என 57 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.
  பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'எதிர்க்கிறேன்’ என 51 சதவிகிதம் பேர் 'டிக்’ அடித்திருக்கிறார்கள்.
'பி.ஜே.பி. கூட்டணிக்கு ஓட்டுப் போடுவீர்களா?’ என்ற கேள்விக்கு 73 சதவிகிதம் பேர் 'போட மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். சர்வேயில் இடம்பெற்ற எட்டு கேள்விகளில் இந்த கேள்விக்கான ஆப்ஷனில்தான் மிக அதிகபட்சமாகக் கருத்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் தகுதியானவர் என 44 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.
'உங்கள் ஓட்டு யாருக்கு?’ என்கிற முக்கியமான கேள்விக்கு தி.மு.க-வுக்குதான் அதிக வாக்குகள் விழுந்தன. தி.மு.க-வுக்கு கிடைத்த ஆதரவு 24.81 சதவிகிதம். அதற்கு அடுத்து மிக நெருக்கத்தில் அ.தி.மு.க. இருக்கிறது. அதற்குக் கிடைத்த ஆதரவு 24.09 சதவிகிதம். மற்றவர்கள், காங்கிரஸ், பி.ஜே.பி., தே.மு.தி.க. ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கூட்டணிகள் இன்னும் முடிவாகாத சூழலில் சிறுபான்மையினரின் ஆதரவு நிலை இது. கூட்டணிகள் முடிவாகி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நிலை மாறலாம். முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளின் பெயர்கள் சர்வேயில் குறிப்பிடவில்லை என முஸ்லிம்கள் பலர் ஜூ.வி. டீமிடம் கருத்து சொன்னார்கள்.

ad

ad