புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

ரண்டாவது வெற்றியைச் சுவைத்தது இந்தியா

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஐந்தாவது உலக கிண்ண 20/20 கிரிக்கெட் தொடரின் 'சுப்பர்-10'சுற்று போட்டி இடம்பெற்றுவருகிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி முதலில்
களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன் படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஒவர்கள் நிறைவில் 7 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
 
 
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இறுதி கட்டத்தில் சற்று தடுமாறிய போதும் தனது பொறுமையான துடுப்பாட்டத்தால் 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 130 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.
 
 
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையாக கெயில் (34)ஓட்டங்களை இரண்டு சிக்ஸர்கள் அடங்கலாக  பெற்றுக்கொடுத்திருந்தார்.
                         
 
பந்து வீச்சை பொறுத்த வரையில் ஆர்.ஏ.ஜெடியா அதிக படியாக நான்கு ஒவர்கள் பந்து வீசி 48 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுக்ளை கைப்பற்றியிருந்தார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் 130 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய  இந்திய அணியில் அதிப்படியான ஓட்ட எண்ணிக்கையாக ஆர்.ஜி.ஷர்மா ஆட்டம் இழக்காமல் 55 பந்துகளில் 2 சிக்ஸர் அடங்களாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
 
                                          
 
 
 
இரண்டாவது அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையாக கொலியினால் 41 பந்துகளில் 1சிக்ஸர் அடங்களாக 54 ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளது.
இன்றைய நாள் ஆட்டத்துடன் இந்திய அணி தனது இரண்டவது வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

ad

ad