புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2014

தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாத சுமுகநிலை

தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடுகள் மிகவும் குறைந்தளவிலேயே பதிவு
25,000 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த ஏற்பாடு
நாட்டில் இதுவரை நடந்து முடிந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் முன்னொருபோதும் இல்லாத வகையிலான அமைதியான சூழலை மேல் மற்று
ம் தென் மாகாண சபை தேர்தல் களங்களில் காணக்கூடிய தாகவுள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்டவிதிகளை மீறும் செயற்பாடுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய ஆணையாளர், போஸ்டர்கள், கட்அவுட்கள் காரணமாகவே அநேகமான மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறினார்.
தேர்தல் பிரசாரக் களத்தில் பொலித்தீன் உபயோகத் தடைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிaர்களோ அதேயளவு முக்கியத்துவத்தை மதுசார பாவனைத் தடைக்கும் வழங்க வேண்டுமெனவும் ஆணையாளர் கேட்டுக்கொண் டார். மதுபாவனையை இவ்வாறான சந்தர்ப்பங்களில் தவிர்ப்பதன் மூலம் வீண் வாக்குவாதங்கள் மற்றும் மோதல்களை அறவே இல்லாமல் செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
அமைதியான சூழல் நிலவுகின்ற போதும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பும் பின்பும் மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் பாதுகாப்பினை பலப்படுத்தும் முகமாக சுமார் 16 ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்னவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிலைமையை பொறுத்து இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய தற்போது வாக்களிப்பு நிலையங்களில் 8,500 பொலிஸாரும். ரோந்து நடவடிக்கைகளுக்கென 2,500 பொலிஸாரும் வாக்கு எண்ணும் நிலையங்களில் சுமார் 3500 பொலிஸாரும் ரோந்து நடவடிக்கைகளுக்கென 1500 பொலிஸாரும் சேவையில் ஈடுபடுத்தப்படுவரெனவும் ஆணையாளர் தெரிவித்தார்.
இம்முறை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வெளிநாட்டு கண்காணிப் பாளர்கள் அழைக்கப்படவில்லையெனவும் உள்நாட்டைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவரெனவும் அவர் கூறினார். “சிலர் நான் சட்டத்தை கடுமையாக கடைப்பிடிப்பதாகவும் சிலர் நான் சட்டத்தைச் சரிவர பின்பற்றுவது இல்லையெனவும் குற்றம் குறை கூறுகிறார்கள். எவ்வாறாயினும் அனைத்து செயற்பாடுகளையும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே நான் பின்பற்றுகின்றேன். எனக்கு தேர்தல் சட்டவிதிகளை மீறுவதற்கோ அல்லது திருத்தியமைப்பதற்கோ அதிகாரமில்லை” யென்றும் அவர் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு கடமைகளில் 25 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணையாளருடன் இணைந்து பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தேர்தல்கள் நடைபெறவுள்ள இரு மாகாணங்களில் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஐ.பி. தரத்தில் மற்றும் எஸ்.ஐ. தரத்தை உள்ளடக்கிய 904 ரோந்துக் குழுக்களும் 25ஆயிரம் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலிருந்து உயர் தரங்களைச் சேர்ந்த 150 உயர் அதிகாரிகளும் மேற்பார்வை கடமைகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இங்கு மேலும் விளக்கமளிக்கை யில், மேல் மற்றும் தென்மாகாணசபை களுக்கு 151 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 80 அரசியல் கட்சிகள் 43 சுயேட்சை குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி 3794 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட உள்ளனர். இ தற்கென 4266 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தற்பொழுது தேர்தல் தொடர்பான போஸ்டர்கள், கட்அவுட்டுகள், பதாகைகளை அகற்றல் உட்பட பாதுகாப்பு கடமைகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் அது 25,035 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இதில் ஆயுதம் தாங்கிய ஆண் மற்றும் பெண் பொலிஸாரும் அடங்குவர்.
இதே வேளை தேர்தல் தொடர்பிலான வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் தற்பொழுது 26 வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன், தேர்தல் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அது 129 ஆக அதிகரிக்கப்பட்டு விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட வுள்ளனர்.
நடமாடும் ரோந்து கடமைகளில் பொலிஸ் 904 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஐ. பி., எஸ்.ஜ.க்களை கொண்ட குழுக்களுக்கு தூர பிரதேசமாக இருந்தால் மூன்று நிலையங்களும் சாதாரண பிரதேசமாக இருந்தால் நான்கு நிலையங்களும் நகரப்புறமாக இருந்தால் ஐந்து நிலையங்களையும் மேற்பார்வை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதே வேளை, இதுவரை தேர்தல் தொடர்பில் 111 முறைப்பாடுகள் உத்தியோகபூர்வமாக பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 55 முறைப்பாடுகளும் தேர்தல் விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் 56 முறைப்பாடுகளும் அடங்கும்.
106 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சிலர் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 34 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 3 அரச வாகனங்களாகும் என்றார்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதும், தேர்தல் வன்முறைகள் இடம்பெறாமல் தவிர்ப்பதும் தேர்தல் ஆணையாளர், தேர்தல் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் மற்றும் அதிகாரிகளினதும் பொறுப்பு மாத்திரமல்ல. மாறாக வேட்பாளர்கள் ஆதரவாளர்களினதும் பொதுமக்களினதும் பொறுப்பாகும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad