புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது 5–ந் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கு கிறது. மனுதாக்கல் செய்வதற்கு வருகிற ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

களை கொண்ட பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி மே மாதம் 12–ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 24–ந் தேதி தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக் கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 24–ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதே நாளில் ஆலந்தூர்சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது.
மனுதாக்கல் இன்று தொடக்கம்
தேர்தல் பிரசாரம் சூடு பிடித் துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியின் (ஆர்.ஓ) அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்.
5–ந் தேதி கடைசி நாள்
மனுதாக்கல் செய்ய ஏப்ரல் 5–ந் தேதி கடைசி நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமை (30–ந் தேதி) விடுமுறை நாளாகும். அதுபோல் 31–ந் தேதி தெலுங்கு புத்தாண்டு தினமும் விடுமுறை தினமாகும். எனவே அந்த இரண்டு விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்படாது.
வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதில் அவரை முன்மொழிவோர் யார் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும். அந்த நபர்கள், அந்த வேட்பாளர் போட்டியிடும் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, ஒருவர் முன்மொழிந்தால் போதுமானது. மற்ற கட்சி கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் ஆகியோரை 10 பேர் முன்மொழிய வேண்டும்.
ஊர்வலம் கூடாது
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம் இருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் ஊர்வலமாகவோ, கார்கள் புடைசூழவோ வரக்கூடாது. 100 மீட்டர் தூரத்துக்குள் வேட்பாளருடன் 3 கார்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும்.
தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்துக்குள் வேட்பாளருடன், அவரை முன்மொழிபவர் உள்பட 4 பேர் மட்டுமே செல்லலாம். 5–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார் கள். ஊர்வலம் செல்வதற்கு போலீசாரின் முன்அனுமதி பெறவேண்டும்.
‘டெபாசிட்’ தொகை
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில் இருந்து இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள செலவின பார்வையாளர்களின் பணி தொடங்குகிறது. வேட்புமனு செய்த தேதியில் இருந்து தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு வேட்பாளர் செய்யும் செலவுகள் அனைத்தும் அவரது செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் 25 வயதை கடந்தவராக இருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும்போது ரூ.25 ஆயிரம் தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். அதுபோல் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ரூ.10 ஆயிரத்தை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இதில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆஜராக தேவையில்லை
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வேட்பாளர் கண்டிப்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரை முன்மொழிபவர் மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம். ஆனால் வேட்புமனுவோடு தாக்கல் செய்யப்பட வேண்டிய உறுதிமொழி பத்திரத்தில், மாஜிஸ்திரேட்டு அல்லது ‘நோட்டரி’ அல்லது பிரமாண ஆணையர் முன்னிலையில் கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சையில் இருக்கும் வேட்பாளர்கள், டாக்டர்களிடமும், ஜெயிலில் இருக்கும் வேட்பாளர்கள், சிறை பொறுப்பாளர்களிடமும் சான்றளிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரத்தை பெற்று, அதை முன்மொழிபவர் மூலமாக தாக்கல் செய்யலாம்.
ஆன்லைன் மூலம்
ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் புதிய முறையும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் இணையதளம் மூலமாக உறுதிமொழிப்பத்திரம் தாக்கல் செய்ய விரும்பினால் இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதள முகவரி   www.eci.nic.in என்ற முகவரியில் Online submission of candidate affidavits என்ற தலைப்பை ‘கிளிக்’ செய்ய வேண்டும்.
ஆன்லைனில் தாக்கல் செய்யும்போது, அதில் கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஏதாவது தகவல் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால் அந்த விண்ணப்பங்களை இணையதளம் ஏற்றுக்கொள்ளாது. எனவே இறுதியில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதை இதன் மூலம் தவிர்த்து விடலாம்.
வேட்புமனு தாக்கல் பற்றிய நிர்வாக ரீதியான விளக்கங்களுக்கு supportaffidavit@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்களுக்கு 011–23052043 என்ற தொலைபேசி நம்பரையும் தொடர்பு கொள்ளலாம்.
சொத்து விவரங்கள்
வேட்புமனு தாக்கலின்போது, ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து விவரங்களை காட்டுவது அவசியமாக உள்ளது. முன்பு சொந்த நாட்டில் உள்ள சொத்து விவரங்கள்தான் வேட்பாளர்களால் காட்டப்பட்டு வந்தன. தற்போது வெளிநாட்டில் சொத்துகள், பண சேமிப்புகள் இருந்தால், அதையும் சேர்த்து காட்டவேண்டியது அவசியமாக உள்ளது.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7–ந் தேதியன்று நடைபெறும். தாக்கல் செய்திருக் கும் வேட்புமனுக்களை திரும்பப்பெற விரும்பினால் அதற் கான கடைசி நாள் ஏப்ரல் 9–ந் தேதியாகும். அதன் பிறகு களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல்தெரியவரும்.

ad

ad