சனி, மார்ச் 15, 2014


வாரணாசியில் போட்டியிடுகிறார் நரேந்திர மோடி

பாஜகவின் 4வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி, பாஜகவில் தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்தபடி, உத்திரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி
தொகுதியில் இருந்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், லக்னோ தொகுதியிலும், முரளி மனோகர் ஜோஷி கான்புர் தொகுதியிலும், உமாபாரதி- ஜான்சி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
வழக்கம்போல் பிலிபிட் தொகுதியில் மேனகா காந்தியும், சுல்தான்புர் தொகுதியில் வருண் காந்தியும் போட்டியிடுகின்றனர்.
நடிகரும் பாஜக முக்கியப் பிரமுகருமான சத்ருகன் சின்ஹா, பாட்னா சாஹேப் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தெற்கு தில்லி தொகுதியில் இருந்து ரமேஷ் பிதுராவும் உத்தர்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியால் ஹரித்வாரிலும் போட்டியிடுகின்றனர்.
தெற்கு தில்லியில் ரமேஷ் பிதுரியும், மீனாட்சி லேகி புது தில்லி தொகுதியிலும், வடகிழக்கு தில்லி தொகுதியில் மனோஜ் திவாரியும் போட்டியிடுகின்றனர்.
டாக்டர் ஹர்ஷவர்த்தன் சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தின் 55 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.