புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

வெளிநாடு செல்வதற்காக 4 மாதக் குழந்தையை விற்ற தாய் கைது
மட்டக்களப்பில், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக செல்வதற்காக தனது நான்கு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த பெண் ஒருவரையும் அதனை பணம் கொடுத்து வாங்கிய பெண்ணையும் கல்குடா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கல்குடா – கல்மடு பிரதான வீதியில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாய் ஒருவரே தனது குழந்தையை 8000 ரூபாய்க்கு, கோரக்கல்லிமடுவைச் சேர்ந்த பெண்ணுக்கு விற்க முயன்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தையின் தாய், தனது மூன்றாவது பெண் குழந்தையை கிரான் பிரதேச செயலாளர் பிரிவு, கோரக்கல்லிமடு என்ற இடத்தில் குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்துள்ளார்.
குழந்தை விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக்க புஸ்பகுமார தலைமையிலான குழுவினர் குழந்தையின் தாயையும், குழந்தையை வாங்கிய பெண்ணையும் கைது செய்துள்ளதுடன், குழந்தையையும் மீட்டுள்ளனர்.
குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு உத்தேசித்தே குழந்தையை விற்றதாக விசாரணைகளின்போது குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முகவர் ஒருவர், மேற்படி குழந்தையின் தாயை சட்ட ரீதியற்ற வைத்தியரிடம் அழைத்துச் சென்று தாய்ப்பாலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊசி மருந்தினையும் செலுத்தியதுடன், வெளிநாடு செல்வதற்கான சகல ஆவணங்களையும் தயார் படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad