புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல்? தூத்துக்குடியில் கப்பல்களில் சோதனை
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் கப்பல் ஒன்றில் ரூபாய் 5 ஆயிரம் கோடி பணம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏடிஎஸ்பி கந்தசாமி தலைமையிலான போலீஸ் படையும்,
தேர்தல் பறக்கும் படையும் கப்பல்களை சோதனை செய்தன. மாவட்ட ஆட்சியரும், தாசில்தாரும் சோதனையில் ஈடுபட்டனர். அதுசமயம் மூன்று வெளிநாட்டு கப்பல்கள் கொண்டுவந்த சரக்கை இறக்குமதி செய்வதற்காக தூத்துக்குடி துறைமுகத்தின் பெரத்துகளில் நிறுத்தப்பட்டிருந்தன.

மலேசிய நாட்டைச் சேர்ந்த ஸ்பெலண்டர் என்ற கப்பலில் மரத்தடிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காங்காய் நாட்டின் தினேஷாஅக்குவா என்ற கப்பலில் பாமாயில் கொண்டுவரப்பட்டிருந்தது. சிங்கப்பூர் நாட்டில் இருந்து வந்த பிரிங்ஸ்கான் கப்பலில் எரிபொருளான பர்னஸ் ஆயில் கொண்டுவரப்பட்டிருந்தது. இந்த மூன்று கப்பல்களும் நேற்று இரவில் இருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 
இதுவரையிலும் பணம் கிடைத்ததற்கான தகவல் இல்லை என்கின்றனர் சம்மந்தப்பட்ட துறையினர். ரூபாய் 5 ஆயிரம் கோடி வந்ததா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்றும், பணம் மற்றும் பொருட்கள் இருப்பதாக கூறப்படும் கப்பல்களில்

ad

ad