புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

சென்னையில் கல்லூரி மாணவரிடம் 52 லட்சம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மணலியில் இருந்து ராமநாதபுரத்துக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த பஸ் மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்று கொண்டிருந்தது.


தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வின், சப்– இன்ஸ்பெக்டர் சத்தியன், போலீஸ்காரர்கள் பெரியசாமி, செந்தில் ஆகியோர் அந்த பஸ்சை நிறுத்தினார்கள். பஸ்சில் இருந்த பைகள், பெட்டிகள் ஆகியவற்றை சோதனை செய்தார்கள்.
அப்போது ஒரு வாலிபரின் சீட்டின் கீழே அட்டைப்பெட்டி ஒன்று இருந்தது. அதை சோதித்தபோது அதன் உள்ளே ஆயிரம், 500 ரூபாய் கட்டுக்களாக ரூ. 52 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 90 செல்போன்கள் இருந்தன.
அந்த அட்டைப்பெட்டியை முகமது சஸ் ரீத் (19) என்பவர் கொண்டு சென்றது. விசாரணையில் தெரிய வந்தது. இவரது தந்தை பெயர் அலிஉமர். தயார் சென்னை ஏழு கிணறைச் சேர்ந்தவர். சஸ் ரீத்துடன் அவரது நண்பர் அக்னேஷ் (17) என்பவரும் இதே பஸ்சில் சென்றுள்ளார்.
பணம் நிரம்பிய அட்டைப் பெட்டியுடன் சிக்கிய முகமது சஸ்ரீத், அக்னேஷ் இருவரும் கல்லூரி மாணவர்கள். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.பணத்துக்கான ஆவணம் எதுவும் இல்லை. எனவே பணம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணமும் அதை கொண்டு சென்ற மாணவரும் மீனம்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது என்று கேட்டபோது, ‘‘எனது தந்தை இந்த அட்டைப் பெட்டியை பாட்டி வீட்டில் கொடுக்கச் சொன்னார். அதில் என்ன இருந்தது என்பது எனக்கு தெரியாது’’ என்றார்.

ad

ad