புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப்பட்டறையின் ரசாயனக் குழாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாயப்பட்டறை நிறுவனம்
ஒன்றில் ரசாயன குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரசாயன குழாய் வெடித்தது. இதனால் சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற 6 பேரையும் விஷவாயு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இறந்த தொழிலாளர்கள் ஈரோடு, திருப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், இறந்தவர்கள் சிவா, சுதாகர், ஸ்ரீதர், முருகன் என அடையாளம் தெரிந்துள்ளது. மேலும், 3 பேரை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு கவசம் எதுவுமின்றி தொழிலாளர்கள் துப்புரவு பணி செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போதே இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியானது. ஆனால்  ஊழியர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது இந்த விபத்து நடக்கவில்லை என்றும்,  ரசாயன குழாய் அடைப்பை சரி செய்யும்போதே இந்த விபத்து நிகழ்ந்தது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பேர் கைது
இதனிடையே தொழிலாளர்கள் உயிரிழந்த தனியார் ஆலையின் தனி அலுவலர் ரமணன், ஆலை மேலாளர் ரங்கராஜன், சுத்திகரிப்பு நிலைய மேலாளர் நாகராஜன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ad

ad