புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

ஐ பீ எல்  போட்டிகள் அட்டவணை வெளியீடு 
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்

7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான தேதியும், பாராளுமன்ற தேர்தல் தேதியும் ஒரேநேரத்தில் வருவதால், பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஐ.பி.எல். போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும், 2-வது கட்ட ஆட்டங்கள் இந்தியாவில் தேர்தல் முடிவடைந்த மாநிலங்களில் நடத்துவது என்றும், அதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் வங்காளதேசத்திலும், இறுதி கட்ட ஆட்டங்கள் இந்தியாவிலும் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல் கட்ட போட்டி அட்டவணை முடிவு செய்து வெளியிடப்பட்டது.
முதல் கட்ட அட்டவணை வெளியீடு
இதன்படி 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட ஆட்டங்கள் (20 லீக் ஆட்டங்கள்) ஐக்கிய அரபு எமிரேட்சில் மூன்று மைதானங்களில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. அபுதாபி, துபாயில் தலா 7 ஆட்டங்களும், ஷார்ஜாவில் 6 ஆட்டங்களும் நடைபெறும்.
ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மே முதல் வாரத்தில் இருந்து...
2-வது கட்ட ஆட்டங்கள் மே 1-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும், இறுதிப்போட்டி உள்ளிட்ட கடைசி கட்ட ஆட்டங்கள் இந்தியாவில் மே 13-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரையும் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரையிலான காலத்தில் 9 கட்டங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். நிர்வாக குழு கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உள்துறை அமைச்சகம் தொடர்ந்து எடுத்த முயற்சியின் பலனாக நிறைய மாநிலங்கள் ஐ.பி.எல். போட்டியை தங்கள் மாநிலங்களில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. இதுவரை எங்களுக்கு கிடைத்து இருக்கும் சாதகமான பதில்களின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிக்கான ஆட்டங்களை மே முதல் வாரத்தில் இருந்து இந்தியாவில் நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேதி மோதும் அணிகள் இடம் இந்திய நேரம்
ஏப்.16 மும்பை–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி
ஏப்.17 டெல்லி–ராஜஸ்தான் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.18 சென்னை –பஞ்சாப் அபுதாபி மாலை 4 மணி
,, ஐதராபாத்–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்.19 பெங்களூர்–மும்பை துபாய் மாலை 4 மணி
,, கொல்கத்தா–டெல்லி துபாய் இரவு 8 மணி
ஏப்.20 ராஜஸ்தான்–பஞ்சாப் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.21 சென்னை–டெல்லி அபுதாபி இரவு 8 மணி
ஏப்.22 பஞ்சாப்–ஐதராபாத் ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.23 ராஜஸ்தான்–சென்னை துபாய் இரவு 8 மணி
ஏப்.24 பெங்களூர்–கொல்கத்தா ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.25 ஐதராபாத்–டெல்லி துபாய் மாலை 4 மணி
,, சென்னை–மும்பை துபாய் இரவு 8 மணி
ஏப்.26–ராஜஸ்தான்–பெங்களூர் அபுதாபி மாலை 4 மணி
,, பஞ்சாப்–கொல்கத்தா அபுதாபி இரவு 8 மணி
ஏப்.27 டெல்லி–மும்பை ஷார்ஜா மாலை 4 மணி
,, ஐதராபாத்–சென்னை ஷார்ஜா இரவு 8 மணி
ஏப்.28 பெங்களூர்–பஞ்சாப் துபாய் இரவு 8 மணி
ஏப்.29 கொல்கத்தா–ராஜஸ்தான் அபுதாபி இரவு 8 மணி
ஏப்.30 மும்பை–ஐதராபாத் துபாய் இரவு 8 மணி

ad

ad