புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014




தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கவுகாத்தி: தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.


தமிழகத்தில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கூட்டணியிலிருந்து விலகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், கவுகாத்தியில் இன்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''மத்தியில் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ், பா.ஜ.க. தவிர்த்து அமையும் எந்தவொரு மதச்சார்பற்ற அரசுக்கும் இடதுசாரிகள் ஆதரவு அளிக்கும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை ஆதரிக்காத ஜெயலலிதா, நிதிஷ் குமார் அல்லது நவீன் பட்நாயக் இவர்களில் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்க எங்களது கட்சி தயாராக உள்ளது.

இருப்பினும் நிதிஷ்குமார், நவீன் பட்நாயக் ஆகியோரின் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொண்டிருப்பதால் அவருடனான கூட்டணியை புதுப்பிக்க நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

ad

ad