புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2014

ராஜிவ்காந்தி மரணம் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
             
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் கந்தவேல்
இல்லத்தில் நிருபருக்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் காங்கிரசுக்கு தனிபட்ட வாக்கு வங்கி உள்ளது, அது என்றைக்கும் இருக்கிறது. மத்தியில் நிலையான ஆட்சி, மதசார்பின்மை ஆகியவற்றைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழக மக்களும் ஆதரவு தருகின்றனர் அதனால் நாடளுமன்ற தேர்தலில் வாக்கு வங்கி அதிகரிக்கும். தேர்தலில் காங்கிரஸ் முக்கியமான பங்கு வகிக்கும்,

வர இருக்கின்ற தேர்தலில் மத்திய அரசின் நல்ல திட்டங்கள் காங்கிரஸின் மூன்றாவது வெற்றிக்கு அகில இந்திய அளவில் அடிதளமாக அமையும். கூட்டனி குறித்து அகில இந்திய காங்கிரஸ் மிக விரைவில் முடிவு அறிவிக்கும். 
ஒவ்வொரு விசயத்திலும் மக்களின் நன்மை கருதியே மத்திய அரசு செயல்படுகிறது. முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி மரணம் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. தூக்கு தன்டனை குறித்து காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் தனது முடிவில் உறுதியாக உள்ளது. நல்ல தீர்ப்பு கோர்டிலிருந்து வரும் என நம்புகிறோம். திரும்பவும்  தீர்ப்பு வழங்குவதற்க்காக தான் கோர்ட்டே. கோர்டின் மீது மத்திய அமைச்சரான நான் நம்பிக்கை இல்லை என சொல்லமுடியாது. நான் சட்டத்தை மதிக்கிறேன், அரசும் மதிக்கிறது, நீங்களும் சட்டைத்தை மதிக்க வேண்டும் என வாசன் பேட்டியின் போது  தெரிவித்தார். 
அப்பொழுது  அவருடன்  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் மற்றும் சுரேஷ் மூப்பனார், எம்.எல்.ஏ., ரெங்கராஜன், மாவட்ட தலைவர்கள் தினகரன் (திருவாரூர்), ராம்குமார் (தஞ்சை), வட்டார நிர்வாகி  கவுன்சிலர் காமராஜ், நகர தலைவர் ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அசேக் குமார், காந்தி நாரயனன் உட்பட பலர் இருந்தனர்.

ad

ad