புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

யாழ். மாவட்டம்  வீடுகளுக்குள் புகுந்த முதலைகள்.
யாழ். அச்சுவேலி வடக்கு நாவற்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி மக்களால் மடக்கி பிடுக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு அருகிலுள்ள வல்லைவெளி சதுப்புநிலத்தில் இருந்து குறித்த முதலை மேற்படி வீட்டிற்குள் வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த முதலையை வனஜீவராசி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த 12 ம் திகதி புதன்கிழமை அதிகாலை யாழ்.நாயன்மார்கட்டு கிராமத்திற்குள் புகுந்த சுமார் 5 அடி நீளமான முதலை அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad