புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2014

மகிந்தாவின் சொந்த மாகாணத்தில் சென்ற தேர்தலை விட இந்த முறை ஆளும் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு வீழ்ச்சி
மகிந்த தனது மாகாணத்தில் ல் புதிய துறைமுக.விமான நிலையம் கடுகதி நெடுஞ்சாலை என பல பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்திருந்த போதும் இந்த தேர்தலில்  அவரது கட்சி  வீழ்ச்சியைக் கண்டுள்ளது 
நடந்து முடிந்த தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 5 ஆசனங்களை குறைவாக பெற்றுள்ளது.
கடந்த முறை ஆளும் கட்சி 36 ஆசனங்களை கொண்டிருந்தது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மொத்துள்ள 14 ஆசனங்களில் ஆளும் கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றியதுடன் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆவணங்களையும் ஜே.வி.பி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியது.
சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆசனங்கள் கைப்பற்றவில்லை.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில் 12 ஆசனங்களை கைப்பற்றியிருந்துடன் அது இம்முறை 10 ஆக குறைந்துள்ளது.
அந்த மாவட்டத்தில் 5 ஆசனங்களை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 4 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியது. ஜே.வி.பி இரண்டு ஆசனங்களை கைப்பற்றியது.
ஜனநாயகக் கட்சி மாத்தறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.
அதேவேளை காலி மாவட்டத்திலும் ஆளும் கட்சியின் வாக்குகள் குறைவடைந்துள்ளன.
காலி மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 16 ஆசனங்களை கைப்பற்றிய ஆளும் கட்சி இம்முறை 13 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது.
ஐக்கிய தேசியக் கட்சி 6 ஆசனங்களை கைப்பற்றியதுடன் ஜனநாயகக் கட்சி இரண்டு ஆசனங்களையும் ஜே.வி.பி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.
தென் மாகாண சபையின் தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 31 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 3ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஜே.வி.பி 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி
தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
காலி மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு- 293619
ஐக்கிய தேசியக் கட்சி- 134305
ஜனநாயகக் கட்சி- 45484
ஜே.வி.பி- 30529
ஹம்பாந்தோட்டை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு- 174,687
ஐக்கிய தேசியக் கட்சி- 79,829
ஜே.வி.பி- 39,345
ஜனநாயகக் கட்சி- 9,547 
மாத்தறை மாவட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு- 231,102
ஐக்கிய தேசியக் கட்சி- 96,297
ஜே.வி.பி. 39,158
ஜனநாயகக் கட்சி- 20,501
தென் மாகாணசபை ஆசன எண்ணிக்கை விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு-   33 ( இரு போனஸ் ஆசனங்களுடன்) ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி- 14 ஆசனங்கள்
ஜே.வி.பி- 5 ஆசனங்கள்
ஜனநாயகக் கட்சி- 3 ஆசனங்கள்

ad

ad