புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : யாழ் பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
பொலிசாருக்கெதிராக  யாழ். பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைத் துறை  மாணவர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் இனம் தெரியாத 15 பேர் கொண்ட குழுவால்  நேற்று முன்தினம் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்ய தயக்கம் காட்டி வந்த நிலையில் மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இன்று காலை ஆரம்பமாகிய இப் போராட்டத்தில் திட்டமிட்டு எம்மை பழிவாங்காதே, பொலிசே மாணவரை பொங்க வைக்காதே, பொலிசாரே பக்கச் சார்பாக நடக்காதீர்கள், விபூசிகா ஜெயக்குமாரியைக் கைது செய்த நீ இவர்களை ஏன் கைது செய்யவில்லை போன்ற பதாதைகள் மற்றும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேவேளை மாணவர்கள் ஒரு புறம் போராட்டத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் யாழ். பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் கல்வி பயின்று வரும் 3ம் வருட மாணவர்கள் ஐந்து பேரை சந்தேகத்தின் பெயரில் கைது பொலிசார் செய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டார்கள் என சுன்னாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





Share on print
481622774725758972#sthash.ePBX8ukQ.dpuf

ad

ad