புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது!– உயர் நீதிமன்றம்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது

ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை பணி நீக்கி, மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டமை ஓர் அடிப்படை உரிமை மீறலாகும் என பாக்கியசோதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்ற மனுவிற்கு சட்ட மா அதிபர் பாலித பெர்னாண்டோ முன்னர் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த எதிர்ப்பினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நீதியசரசர் சலீம் மர்சூக்கின் தலைமையிலான நீதியரசர் குழு இந்த மனுவை விசாரணை செய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு வழக்குத் தொடர முடியாத வகையிலான வரப்பிரசாதம் காணப்படுகின்றது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டின் அரசியல் சாசனத்தின் 35ம் சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு குற்றச் செயல்களின் போது தண்டனை விதிக்க முடியாத விசேட வரப்பிரசாதம் காணப்படுகின்றது.
மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் டாக்டர் பாக்கியசோதி சரவணவமுத்துவினால் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 

ad

ad