புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
திருநங்கைகள் எண்ணிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உரிய பாதுகாப்பு சட்டம் அமைத்திட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை
அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குழுவினர் சனிக்கிழமை காலை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மாற்றுப் பாலினத்தவரான எங்களுக்கும் பசி, தாகம், உறக்கம், கழிப்பு, அன்பு, அறிவு, செயல்திறன், ஆற்றல், உணர்வு எல்லாம் உண்டு. எங்கள் உரிமைகளை பெறவேண்டும் என்ற வேட்கை உண்டு. ஆனால் சமூகம் எங்களை வினோத, வேடிக்கை பிறவிகளாக, நுகர்வுப் பொருளாக வாழ்வின் விளிம்பு நிலைக்கும் கீழே தள்ளி மிதிக்கிறது.
அரசு சார்பில் கிடைக்கும் வாழ்வுரிமைக்கான வாழ்வாதாரங்கள், காவல், சட்டம், சமூக சமத்துவம் ஆகிய அனைத்து உரிமைகளும் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. நாங்கள் எப்படி வாழ்வோம்? எங்கே போவோம்? என்றனர்.
இதனிடையே அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். தமிழக அரசு எங்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். 

ad

ad