செவ்வாய், மார்ச் 25, 2014

ப.சி. ஆதரவாளர் வீடு, விடுதியில் சோதணை 
புதுக்கோட்டையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆதரவாளர் மாரிமுத்து வீ்டு, அவரது மாரீஸ் விடுதியில் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை
மேற்கொண்டனர்.


 புதுக்கோட்டையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருபவர் மாரிமுத்து. மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் நெருங்கிய ஆதரவாளரான இவரது வீடு மற்றும் தங்கும் விடுதியில் மதுரை வருமானவரித் துறையிலி ருந்து 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.


சோதனையில் கணக்கில் வராத பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,  அதற்கான விளக்கம் கேட்டு மாரிமுத்துவிடம் அலுவலர்கள் நோட்டீஸ் அளித்து விட்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. 

       மத்திய நிதி அமைச்சரின் ஆதரவாளரான நண்பர் வீட்டில்  வருமான வரி சோதணை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பாக உள்ளது.