புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் நீடிப்பதா?பா.ம.க. அவசர ஆலோசனை இறுதி முடிவு இன்று அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடித்து
வருகிறது.கடந்த 2 வாரமாக அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியும், பா.ம.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவையுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை.
சேலம்திருப்பூர்
தே.மு.தி.க.வுக்கு முதலில் விட்டுக்கொடுத்த சேலம் தொகுதியை பா.ம.க. தற்போது மீண்டும் கேட்டு அடம்பிடிக்கிறது.அதேபோல், கரூர் தொகுதி ஒதுக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கரூருக்கு பதிலாக திருப்பூர் தொகுதியை கேட்கிறது.
பேச்சுவார்த்தை
பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இவ்வாறு சிக்கல் இருக்க, கூட்டணியை இறுதி செய்து அறிவிக்க முடியாத நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் உள்ளனர். பா.ம.க.வுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.இதனால் பா.ஜ.க., நேற்று இரவு வரை பா.ம.க.வுக்கு கெடு விதித்திருந்தது.அதாவது, சேலம் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், அதைத்தர முடியாது. அதற்கு பதிலாக ராமநாதபுரம், தஞ்சாவூர் தொகுதியில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பா.ஜ.க. கூறிவிட்டது. அதே நேரத்தில், பா.ஜ.க.விடம் உள்ள திருப்பூரை கேட்டு அடம்பிடிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்று இறுதி முடிவு
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற்றுள்ளன?, யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள்? என்பதை பா.ஜ.க. தலைவர்கள் இன்று (புதன்கிழமை) இறுதி செய்ய உள்ளனர்.இதனால் இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக பா.ம.க.வினர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். அன்புமணி ராமதாஸ், பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டாக்டர் ராமதாஸ், தேர்தல் சுற்றுப்பயணத்தில் இருந்தபடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் 2 விதமாக தொகுதி பங்கீட்டு பட்டியலை தயாரித்துள்ளனர்.அதாவது, பா.ம.க. கூட்டணியில் இருந்தால் ஒருமாதிரியாகவும் இல்லை என்றால் வேறு ஒரு மாதிரியாகவும் 2 விதமாக பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்துள்ளனர்.
நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இன்று (புதன்கிழமை) மாலை பா.ஜ.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு பட்டியல் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கின் ஒப்புதலை பெற்று, நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
ஆலோசனை
பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் பா.ஜ.க. களம் இறங்கும் 8 தொகுதிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க., தென்சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், தென்காசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், இந்த மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளை நேற்று அழைத்து, சென்னை கமலாலயத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாற்று கட்சி வேட்பாளரின் பலம், தொகுதி நிலவரம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை கமலாலயத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தொகுதி நிலை குறித்து ஆலோசனை
தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலை குறித்து ஆலோசனை நடத்தினோம். அதன்படி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தோம்.பா.ஜ.க. கூட்டணி இன்று முடிவு செய்யப்படும். நாளை (20ந்தேதி) பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் சென்னை வர அழைப்பு விடுத்துள்ளோம். அவர் வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம்.  பா.ஜ.க. கூட்டணியில் யார் யார் திருப்தி அடைந்தார்கள் என்பது பேச்சு வார்த்தையின் இறுதியில் தெரியும். நான் டெல்லி சென்று கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங்கையும், பொறுப்பாளர்களையும் சந்தித்து பேச உள்ளேன்.நாளை ராஜ்நாத்சிங் சென்னை வரும்போது அவரை சந்திக்க கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளோம்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

ad

ad