புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

சர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை தொடர்­பாக தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மை­யாளர் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்­ளது.


 
மூன்று தட­வைகள் திருத்தத்துக்குள்­ளான இந்த பிரே­ர­ணையில் இலங்­கைக்கு எதி­ரா­கவும் சர்­வ­தேச விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்­டு­மென்ற சரத்தும் சேர்க்­கப்­பட்­டுள்­ளதாகத் தெரி­ய­வந்­துள்­ளது.
 
இலங்­கைக்கு எதி­ரான இந்த பிரே­ரணை மீது விவாதம் நடத்­தப்­பட்டு 28ஆம் திகதி பிரே­ரணை மீது வாக்­கெ­டுப்பு இடம்­பெ­ற ­வுள்­ளது. இலங்­கைக்கு எதி­ரான இப்­பி­ரே­ர­ணைக்கு அமெ­ரிக்கா பிரிட்டன் அதே­போன்று ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் ஏற்­க­னவே ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்துள்­ளன.
 
கடந்த வருடம் ஜெனீவா மனித உரி­மைகள் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணைக்கு ஆதரவளித்து 25 நாடுகள் இம்முறையும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமென அமெரிக்கா தெரிவிக்கின்றது.

ad

ad