புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

நவிபிள்ளையின் அறிக்கைஅரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது - இலங்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள இலங்கை, குறித்த அறிக்கையானது அரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் இன்றைய இலங்கை குறித்த விவாதத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரத்தில் தெரிவு செய்யப்பட்டதும் ஆக்கிரமிக்கும் வகையிலும் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை குறித்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
இலங்கை குறித்த அறிக்கையானது அரசியல் மயமானதும் அப்பட்டமான தவறுகளையும் கொண்டதாகவும் உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அமைக்க வேண்டும் என்ற நவநீதம்பிள்ளையின் பரிந்துரையானது அவரின் ஆணையை மீறுவதாக அமைந்துள்ளது.

இலங்கை இதற்கு முன்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை நிராகரித்திருந்தது. அதனையே தொடர்ந்தும் செய்யும்.
அரசியல்மயமான செயற்பாடுகள் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நல்லிணக்க செயற்பாடுகளை பாதிப்பதாக அமையும்.

ad

ad