புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014


மக்கள் விரோத சக்தி ஜெயலலிதா. ஜெயலலிதாவைத்தான் ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும்: விஜயகாந்த் கடும் தாக்கு
 


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ஜோயலை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,


தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். நரேந்திர மோடியால் தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தூத்துக்குடியில் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதால் கொலை, கொள்ளைகள் அதிகரித்துவிட்டன. 
உடன்குடி மின்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இலவச பொருட்களுக்கு அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் விலை நிர்ணயம் செய்கின்றனர். மின்தடை காரணமாக டிவி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை உபயோகிக்க முடியவில்லை. 
ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வரும்போது, செய்வீர்களா... செய்வீர்களா... என்று மக்களை பார்த்து கேட்கிறார். நான் கேட்கிறேன். ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவீர்களா.... அனுப்புவீர்களா.... அனுப்புவீர்களா....
மக்கள் விரோத சக்தி யார். மக்கள் விரோத சக்தி ஜெயலலிதா. ஜெயலலிதாவைத்தான் ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் கொடுக்கவில்லை. ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டாஸ்மாக் வருமானம் இவ்வளவு என்று நிர்ணயம் செய்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் இத்தனை ஆண்டுகளில் உயர வேண்டும் என்று நிர்ணயம் செய்கிறார்களா. எங்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க. மின்சாரம் கொடுங்க. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுங்க.

சின்ன கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க என்று சொல்றாங்க. 2004ல் அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அப்படியென்றால் உங்களை சின்ன கட்சி என்று சொல்லட்டுமா. இவ்வாறு பேசினார்.

ad

ad