புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014

வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு கொழும்புத் தமிழர்களும்; வாக்களிக்க வேண்டும் :குருசாமி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி நின்றனரோ அதனை உதாரணமாகக் கொண்டு நடைபெறவிருக்கும் மேல்மாகாணசபைத் தேர்தலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப்பார்த்து வாக்களித்து ஜனநாயக மக்கள் முன்னணியை அங்கிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மேல்மாகாணசபையின் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் கே.ரி. குருசாமி தெரிவித்தார்.
 
முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில்; பிரைட்டன் ரெஸ்ட்டில் இடம்பெற்ற தனது முதலாவது பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
குருசாமி இங்கு மேலும் கூறுகையில்,
 
கொழும்பு வாழ் வர்த்தக சமூகத்தினரின் பெயரை தவறாக பயன்படுத்துவதற்கோ அல்லது தவறாக அர்த்தப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது.
 
மலைய மக்கள் முன்னணி சார்பாகவே நான் அரசியலில் கால்பதித்தேன். இதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறக்கவோ மறுக்கவோ மாட்டேன். மறைந்த தலைவர் பெ. சந்திரசேகரனின் வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்கு எனக்கு அங்கீகாரம் வழங்கியவர் முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதகிருஷ்ணன் என்பதை உறுதியாகக் கூறுவேன்.
 
அத்துடன் கடந்த பல தேர்தல்களின்போது என்னை ஏற்று வாக்குகளை வழங்கி வெற்றியாளனாக மாற்றியமைத்தமை தொடர்பிலும் கடமைப்பட்டிருக்கின்றேன் என்பதை எனது அன்புள்ளங்களுக்கு உறுதியளித்துக்கொள்கிறேன்.
 
தலைவர் சந்திரசேகரனின் மறைவையடுத்து மலையக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அரசியல் பணிகள் சரிவடையத் தொடங்கியன. முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து பிரிதொரு தினத்தில் என்னை அழைத்து அவர் தான் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடப்போவதாகக் கூறினார். அதுமாத்திரமின்றி உங்களின் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளுங்கள் என்றும் என்னிடம் கூறினார்.
 
இதனையடுத்து ஆர்வலர்களின் ஆலோசனையின் பேரிலும் தீவிர ஆராய்வுகளின் பின்னரும் தலைவர் மனோவுடன் கைகோர்த்து பயணிக்கத் தீர்மானித்தேன்;. அவ்வாறான பயணத்தின் அடிப்படையில்தான் மீண்டும் உங்களின் முன் வந்து நிற்கிறேன்.
தலைவர் மனோவுடனான செயலணியின் எதிர்கால வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் எமது சமூகத்திடமிருந்து சந்தர்ப்பத்தை கோரி நிற்கிறோம்.
எமது சமூகத்தின் தேவைகள் உரிமைகள் அறிந்து அதனைப் பெற்றுக்கொள்வதற்கும் குரல் கொடுப்பதற்கும் எமது மக்களின் பால் தூரநோக்கோடு சிந்திப்பதற்கும் எமது மக்களின் பாதுகாவலுக்கும் ஓர் தலைமைத்துவம் வேண்டும். அத்தகைய தலைவமைத்துவத்தை மனோ கணேசன் தந்துகொண்டிருக்கின்றார்.
 
இன்றைய காலகட்டத்தில் எமது சமூகத்துக்கு மதுசாரத்தைக் கொடுத்து எதனையும் சாதித்துவிடலாம் என்று எண்ணிவிடக் கூடாது.
 
வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழ் மக்கள் சமூகத்துக்கு சிறந்த உதாரணமாகும்.
அந்த மக்கள் சலுகைக்காகவோ அபிவிருத்திக்காகவோ வாக்களிக்கவில்லை. அரச இயந்திரம் அக்காலப்பகுதியில் அங்கு வேகமாக இயங்கியது. எனினும் வடக்கு தமிழ் மக்கள் தமது சமூகத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டே வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் தமிழ் மக்கள் பெருமையடைந்துள்ளனர்.
 
அந்த வகையில் கொழும்பு வாழ் தமிழ் மக்களும் வடக்குத் தேர்தலை உதாரணமாகக்கொண்டு வாக்களிப்பதற்கு செயற்பட வேண்டும் என்றார்.

ad

ad