புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

தே.மு.தி.க., பா.ம.க.வுக்கு 2 நாள் கெடு விதித்தது பாஜனதா!
)













 

கூட்டணியில் இணைய தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளுக்கு பா.ஜ.க. 2 நாள் கெடு விதித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை வலுவான கூட்டணி அமைத்து தமிழகத்தில் எதிர்கொள்ள பா.ஜ.க. முடிவு செய்துள்ளதால் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.



தற்போதைய நிலையில், ம.தி.மு.க., கொங்குநாடு தேசிய கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெறுவது
உறுதியாகியுள்ளன. ஆனால், தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளையும், மேலும் 2 தொகுதிகளையும் பா.ம.க. கேட்டு வருகிறது. ஆனால், பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்த 8 தொகுதிகளை தே.மு.தி.க.வும் கேட்கிறது. இதனால், பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதில் தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கடந்த சில தினங்களுக்கு முன்னால், இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழகத்தில் கூட்டணியை இறுதி செய்யு
ங்கள் என்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணியை இறுதி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

மற்ற கட்சிகளில் எல்லாம், முதலில் கூட்டணி, பின்னர் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை என்ற நிலை இருக்கும்போது, பா.ஜ.க. கூட்டணியில் அது தலைகீழாக நடக்கிறது. அதாவது, இந்தக் கூட்டணியில் இணைய விரும்பும் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய 2 கட்சிகளுமே, முதலில் இந்தந்த தொகுதிகள் வேண்டும், பிறகு தான் கூட்டணி அறிவிப்பு என்று கூறி வருகின்றன.

இதனால்தான், பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வந்தது. தற்போது, பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுக்கு கெடு விதித்துள்ளார். "முதலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெறுவதை 2 நாட்களுக்குள் உறுதி செய்யுங்கள். அதன் பிறகு தொகுதி பங்கீடு குறித்து பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார்.

இதனால், தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே நேரத்தில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுடனும் இன்னும் பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறாமல் உள்ளது. எனவே, அந்த கட்சி தலைவர்களை இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.

ad

ad