புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

மூங்கிலாற்றில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டவையாம் : தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்

முல்லைத்தீவு மூங்கிலாற்று பகுதியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டவை என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை இதற்கான ஆதாரங்களை இலங்கை பொலிசார் தயார்செய்துள்ள நிலையில் அந்த பிரதேசத்தில் வசிக்கும் கோபால் கோடீஸ்வரன் என்பவரை சாட்சியாளராக தயார்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மனித எச்சங்கள் 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் உழவு இயந்திரத்தில் ஏற்றிவரப்பட்டு குறித்த பிரதேசத்தில் புதைத்ததாக கோபால் என்பவர் பொலிசாருக்கு தகவல் வழங்கி இருப்பதாக, பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சடலங்களை ஏற்றி வந்தவர் குணராஜா என்ற முன்னாள் போராளி என்றும், அவர் பளை பிரதேசத்தில் வசித்துவருவதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை விடுதலைப் புலிகள் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டினை சுமத்தும் நோக்கில் காவற்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருகின்றனர் என்று இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ad

ad