புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

சிக்கலில் தயாளு அம்மாள்!
மீண்டும் தி.மு.க-வுக்கு டென்ஷன். 2ஜி ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ., வருமானவரித் துறை ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இதில்
இறங்கியுள்ளனர். மத்திய நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கவனிக்கும் துறை இது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு மார்ச் 18-ம் தேதியிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அமலாக்கப் பிரிவு. 10 நாட்கள் அவகாசம் கொடுத்து, வருகிற 28-ம் தேதியன்று டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அழைத்துள்ளார்கள். இந்த நோட்டீஸுடன் இணைக்கப்பட்டுள்ள கடிதத்தில், சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார்களாம். கலைஞர் டி.வி-யில் பெரும்பாலான ஷேர்களை வைத்திருப்பவர் தயாளு அம்மாள். 'உடல்நலம் சரியில்லாத நிலையில், அவர் அனைத்து போர்டு மீட்டிங்களிலும் கலந்துகொண்டிருக்கிறாரே... அது எப்படி?’ என்று கேட்டிருக்கிறார்களாம். சி.பி.ஐ. விசாரணையின்போது தயாளு அம்மாள், 'எனக்குத் தமிழ் மொழிதான் தெரியும். மற்ற மொழிகள் தெரியாது’ என்று சொல்லியிருக்கும் பல விஷயங்களை மேற்கோள்காட்டி கேள்விகளை வடிவமைத்திருக்கிறார்களாம். ''இந்த விசாரணையின் நோக்கம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான்'' என்று தி.மு.க. சொல்ல ஆரம்பித்துள்ளது!

ad

ad