புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2014

இருதரப்பு போர்க்குற்றம் தொடர்பாக ஜெனீவாவில் நவிபிள்ளையின் வரைபு விநியோகம் (அறிக்கை இணைப்பு) வரைபை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.
இலங்கையில் படையினரும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரேரணை வரைபு நேற்று விநியோகிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிராக நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கும் மூன்றாவது வரைபு இதுவாகும்.
இதில் உள்ளூர் ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் திருப்தி வெளியிடப்படாத நிலையில் குற்றங்களை கண்டுபிடிக்கும் வகையில் விசேட நிபுணர்களின் உதவிகள் பெறப்பட வேண்டும் என்று தமது வரைபில் பிள்ளை கோரியுள்ளார்.
இந்த வரைபின் மூலம் ஐக்கிய நாடுகளின் விசாரணை பொறிமுறை ஒன்றுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரைபை நேற்று அமெரிக்கா, பிரித்தானியா, மொன்டேனேக்ரோ, மொரிசியஸ் போன்ற நாடுகள் ஏனைய நாட்டு பிரதிநிதிகளுக்கு விநியோகித்தனர்.
இதில் இதுவரையில், மேற்கொண்ட விசாரணைகளின் போது இலங்கைப் படையினர் வெலிவேரியாவில் தண்ணீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவேண்டும் என்றும் பிள்ளையின் வரைபில் கோரப்பட்டுள்ளது.
மதத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் வடக்கில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு 13வது அரசியல் அமைப்பின் முழுமை அதிகாரங்களையும் வழங்கல் போன்ற கோரிக்கைகளும் பிள்ளையின் வரைபில் அடங்கியுள்ளன.

ad

ad