புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

சிறிலங்காவை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என்கிறார் பிள்ளை - இல்லை என்கிறார் பீரிஸ்

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து, விசாரணை செய்வதற்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீது விசாரணை செய்வதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு சட்டரீதியான அல்லது நிதி ரீதியான எந்த அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்று ஜெனிவாவில், சிவில் அமைப்புடளுடனான கலந்துரையாடலில், கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அனைத்துலக மனிதஉரிமை சார் விடயங்களில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அங்கீகாரத்துடன், விசாரணை செய்யும் அதிகாரம் தமக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நடைமுறைக்கு அமைய நாடுகளுக்கு அனைத்துலகம் ஏற்கதக்க உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அது சாத்தியப்படாத நிலையில் தான் அனைத்துலக தளத்தில் விசாரணைக்கான முன்னெடுப்பு இடம்பெறுகிறது.

தென்சூடான் விவகாரத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒப்புதலுக்கு அமைய, அங்கு விசாரணை நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad