புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014


பணம் வினியோகம் செய்ததாக அமைச்சர் மீது புகார்: நிரூபிக்கப்பட்டால் தண்டனை கிடைக்கும்: தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். பிரவீன்குமார் பேசுகையில்,


கள்ளக்குறிச்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா படத்தை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாக புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு மனு அனுப்பி உள்ளோம். அவர் விசாரித்து அறிக்கை அளிப்பார்.
அமைச்சர் எம்.சி.சம்பத் பணம் வினியோகம் செய்ததாக புகார் வந்தது. இது பற்றியும் கலெக்டரின் விளக்கம் கேட்டுள்ளோம். ஓரிருநாளில் அறிக்கை கிடைக்கும். பொதுவாக தேர்தல் விதிமீறல், குற்ற நடவடிக்கை தொடர்பாக புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்ததும் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
கோர்ட்டில் ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும். 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad