புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மார்., 2014

 தீர்மானத்தினை பலவீனப்படுத்த சிறிலங்கா ஆதரவு நாடுகள் கடும் வாதாட்டம்
சிறிலங்காவுக்கு தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்க கலந்தாய்வு, பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில்
இடம்பெற்றுள்ளது.
ஜெனிவாவில் உள்ள அமெரிக்க சிறப்பு பிரதிநிதி Paula Schriefer அவர்களின் தலைமையில் இக் கலந்தாய்வு இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உறுப்பு நாடுகளின் பார்வைக்காக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால், விநியோகிக்கப்பட்ட திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவின் உள்ளடக்கம் குறித்தே இந்தக் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.
43 நாடுகள் பங்கெடுத்திருந்த இக் கலந்தாய்வில் சிவில் அமைப்பினரும் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந்தனர். 30க்கும் மேற்பட்ட தமிழர் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர்.
இரண்டு மணிநேரம் வரை நீடித்த இக் கலந்தாய்வில் சிறிலங்காவினை காப்பாற்றும் வகையில் கியூபா, ரஷ்யா, எகிப்து, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் தீர்மானத்தினை பலவீனப்படுத்தும் வகையில் தொடர்சியாக கருத்துக்களை முன்வைத்திருந்திருந்தனர்.
குறிப்பாக சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் தேசிய மட்டத்திலான செயற்திட்டம் இருக்கும் நிலையில் அனைத்துலகத்தின் உள்நுழைவு அவசியமற்றது எனவும் வாதிட்டிருந்தன.
கீழ்நிலை அதிகாரி ஒருவர் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்திருந்ததோடு கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
பெரும்பாலான மேற்குலக நாடுகள் தீர்மான திருத்தத்தினை வரவேற்றிருந்ததோடு, பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
அனைத்துலக விசாரணை தொடர்பில் தீர்மானத்தின் வரைபு இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென சில நாடுகள் குறித்துரைத்திருந்தன.
அனைத்துலக விசாரணையினை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கே உண்டென்றும், அவரது அலுவலகத்திற்கு இல்லை என கியூபா வாதிட்டிருந்தது.
விசாணையினை 1983ம் ஆண்டில் இருந்தா, 2002ல் இருந்தா எனும் விசாரணைக்கான காலம் பற்றிய உரையாடல் முக்கியமான விவகாரம் எனவும், சிறுபான்மை மதவிவகாரமாக தமிழர் பிரச்சினையை சுருக்கப்படுவது நம்முன் உள்ள பெரும் சவால் எனவும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த 3ம் நாள் முன்வைக்கப்பட்ட முதலாவது தீர்மான வரைபு குறித்து, இரண்டு முறை, முறைசாராக் கூட்டங்களில், விரிவாக விவாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தீர்மானம் சர்வதேச விசாரணையை ஏற்படுத்தும் நிலையில்! இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கலாம்: சுமந்திரன் எம்.பி

ad

ad