புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

வேலூரில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சையளிக்குமாறு கோரி மனுத் தாக்கல்
வேலூர் சிறையில் உள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, பம்மலைச் சேர்ந்த மங்கையர்க்கரசி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடந்த கலவரத்தால் என் கணவர் செந்தூரனுடன் தமிழகம் வந்தேன். 
பூந்தமல்லி சிறப்பு முகாமில் இருந்தோம். முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி, என் கணவர் உண்ணாவிரதம் இருந்தார். கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். என் கணவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தது.
அதை ரத்து செய்யக் கோரிய விண்ணப்பம், அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாமிலேயே தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, செங்கல்பட்டு முகாமில் வைக்கப்பட்டார். அரசின் உத்தரவை வாபஸ் பெறக் கோரி இம்மாதம், 7ம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதிகள் தனபாலன், சொக்கலிங்கம் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில், சட்டத்தரணிகள் எஸ்.துரைசாமி, இளங்கோவன் ஆஜராகினர்.
இந்த மனு தொடர்பில் இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு, அறிவிப்பாணை அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ad

ad