புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது அங்கிருந்த பள்ளி குழந்தைகளிடம் பாரதி பாட்டு பாடி அறிவுரை வழங்கினார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில், இன்று திருமங்கலம், பெரிய உலகாணி என்ற ஊரில் மலைவேம்பு மரக்கன்றுகளை நட்டு வைத்து அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசினார்.

அவர் அப்போது கூறுகையில், ''மற்ற ஊர்களில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த ஊரில் மலைவேம்புக் கன்றை நட்டு வைப்பதற்கான வாய்ப்பை எனக்குத் தந்தார்கள். இதை நான் மறக்க முடியாது. நம் வேம்புக்கும், மலை வேம்புக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். வேம்புச் செடியை ஆடு மாடுகள் கடித்துத் தின்றுவிடும். மலை வேம்பை கடிக்க முடியாது. இந்த மலைவேம்பை நன்றாக வளர்ப்போம் என்றார்கள். நான் திரும்வும் உங்கள் ஊருக்கு வருவேன். அப்போது இந்த மலைவேம்பு நன்றாக வளர்ந்திருக்க வேண்டும்.

இந்த ஊர் மிகவும் வீரமான ஊர் என்பது எனக்குத் தெரியும். உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்பதைப் போல, உலக மக்கள் அடங்கிய தேருக்கு கடையாணியாக இருக்கக்கூடிய விவசாயிகள் இருப்பதனால் இந்த ஊருக்கு உலகாணி என்ற பெயரை நம் முன்னோர்கள் சூட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெரிய உலகாணியில் என்னை வரவேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.

உங்களுக்காக தொடர்ந்து நான் உழைக்க, உங்கள் குழந்தைகளின் நன்மைக்காகப் போராட, விவசாயிகள் கண்ணீரைத் துடைக்க பாடுபட பம்பரம் சின்னத்துக்கு வாக்களித்து உங்கள் எம்.பி.யாக என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இந்த ஊரில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

மதுக்கடைகள் திறப்பதனால், நமது பிள்ளைகள் குடித்து சீரளிந்துவிடுமோ? என்று பயப்படுகிறீர்கள். உங்கள் பயத்தை உணர்ந்தவனாகத்தான் நான் மதுவை ஒழிக்க 1500 கிலோ மீட்டர் வேகாத வெயிலிலும், மழையிலும் நடந்தேன். அதனால்தான் தாய்மார்கள் என்னை அன்போடு வரவேற்கிறார்கள். உங்கள் இன்ப துன்பங்களில் பங்குகொள்கின்ற உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி, பம்பரம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்'' என்றார்.

அதைத் தொடர்ந்து டி.கொக்குளம் கிராமத்திற்குச் சென்ற வைகோ, பள்ளிக் குழந்தைகளைக் கண்டதும் அவர்களிடம், நன்றாகப் படிக்கிறீர்களா? நீங்கள் நன்றாகப் படித்து பெரிய பெரிய அதிகாரிகளாக வரவேண்டும். அப்போதுதான் உங்கள் பெற்றோர் உங்களைப் பார்த்து சந்தோசப்படுவார்கள் என்றவர்,

'அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே' என்று பாட்டுப் பாடி குழந்தைகளையும் பாடச் செய்து மகிழ்ந்தார். 

நீங்கள நல்லா இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் 1500 கிலோ மீட்டர் நடந்தேன். நீங்கள் எதிர்காலத்தில் நல்லா இருக்க வேண்டும் என்று தான் பேசிக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக அல்ல.

காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவுதரும் நல்லபாட்டு மாலை முழுவதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என்று பாரதியின் பாடலைப் பாடி, இது மாலைவேளை என்பதால் நன்றாக விளையாடுங்க எனக் கூறி அங்கிருந்து சென்றார்.

ad

ad