புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2014


மேல்மாகாண தமிழ்க் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்"

நேர்­மை­யான முறை­யிலே தமிழ் கல்­வி க்கு சேவை புரிந்­துள்ளேன். அன்­றாடம் எமது மக்­களின் பல பிரச்­சி­னை­களை தீர்த்து வைத்­துள்ளேன். அநீ­திகள் இடம்­பெ­றும்­பொ­ழுது அதற்கு வெறு­மனே
குரல் கொடுக்­காமல் தட்டிக் கேட்டு நீதியை பெற்றுக் கொடுத்­துள்ளேன். இம்­முறை மேல்­மா­கா­ண­சபை தேர்தல் மக்­க­ ளுக்கு கிடைத்­தி­ருக்கும் ஒரு அரிய சந்­தர்ப்பம் இதில் சிந்­தித்து எமது வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளித்தால் இதனை விட அதி­க­மாக சேவை­யினை பெற்றுக் கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிரபா கணேசன் தெரி­வி த்தார்.
கொழும்பு வாழ் இறத்­தோட்ட மக்­கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்று கையில், பல கோடி ரூபாய் செலவில் நான் தமிழ் கல்­வியை அபி ­வி­ருத்தி செய்­துள்ளேன். மற்­ற­வர்­களை போலன்று எனது அபி­வி­ருத்­தி­களை பட்­டி­யலிட்டும் காட்­டி­ யுள்ளேன். அவி­சா­வளை, களுத்­துறை, தெணி­ய­கலை போன்ற பகு­தி­களில் வாழும் பெருந்­தோட்ட மக்கள் நடக்­கக்கூட முடி­யாத பாதை­களை சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்­மா­ணித்து கொடுத்­துள்ளேன். இங்கு வந்­தி­ருக்கும் குரு­சு­வா­மி­மார்­க­ளுக்கு கடந்த வருட இறு­தியில் இல­வச இந்­திய விசாவை நான் பெற்றுக் கொடுத்­தது நன்­றா கத் தெரியும். அது மட்­டு­மின்றி ஐயப்ப யாத்­தி­ரையை இலங்கை அர­சாங்­கத்தின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட யாத்­தி­ரை­யாக மாற்றிக் காட்­டுவேன்.
தேர்தல் பிரச்­சார வேலைப்­பழு கார­ண­மாக இன்­றைய கூட்­டத்­திற்கு என்னால் பயன்­பெற்ற பல குரு­சா­மி­மார்­களை அழைக்க முடி­யாமல் இருந்­த­தை­யிட்டு மனம் வருந்­து­கின்றேன். இருந்­தாலும் இங்கு வருகை தராத குரு­சா­மி­மார்­களும் ஐயப்ப பக்­தர்­களும் அணி திரண்டு எனது மூன்று வேட்­பா ­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென அன்­புடன் கேட்டுக் கொள்­கின்றேன்.
பலர் பல விட­யங்­களை தேர்தல் நேரங்­களில் சொல்­லலாம். ஆனால் செய்­ததை சொல்லி வாக்கு கேட்­ப­வர்கள் நாங்­க­ளாகத் தான் இருக்­கின்றோம். எனது தமிழ்க் கல்வி சேவைக்கு அங்­கீ­காரம் வழங்க வேண்டும். இல்­லா­விட்டால் முழு­மை­யான சேவை­யினை எனக்கு வழங்க முடி­யாது போய்­விடும்.
எதிர்க்கட்­சி­களால் போராட்­டங்­களை மட்­டுமே நடத்த முடியும். ஆனால் கொழும்பு மாவட்ட தமிழ்ப் பாட­சா­லை­களை அபி­வி­ரு த்தி செய்ய முடி­யாது.
கொழும்பு மாவட்ட மக்­களின் அன்­றாட பிரச்­சி­னை­களை அர­சாங்க ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்கும் எனக்கு மட் டும் தீர்த்து வைக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது. அதற்­காக அர­சாங்­கத்தை தமிழ் மக்­க­ளு க்கு சார்­பான அர­சாங்கம் என்று என்­றுமே கூறி­ய­தில்லை. ஜனா­தி­ப­திக்கு மகுடம் சூட்­டி­ய­தில்லை. இதை தேர்தல் காலங்­களில் மட்­டு­மல்ல எப்­பொ­ழுதும் சொல்லி வரு­கின்றேன்.
எதிர்­வரும் மேல்­மா­கா­ண­சபைத் தேர்­த­லிலே கொழும்பு மாவட்டத்தில் மயில் சின் னத்திற்கும் எனது வேட்பாளர்களுக்கும் நீங் கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்க ளது பிள்ளைகளின் பொன்னான எதிர்கால த்திற்கு அளிக்கும் வாக்குகளாகும். ஆகவே இவ் அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டு விடாதீர்கள்.

ad

ad