புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014


பாஜக, தேமுதிக, பாமக, மதிமுக தொகுதிப்பங்கீடு - முழு விபரம்


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஐ.ஜே.கே.,
கொங்குநாடு கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இக்கூட்டணிக்கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சென்னையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு கூட்டத்தில் ராஜ்நாத்சிங்குடன், வைகோ, விஜயகாந்த், அன்புமணிராமதாஸ், ஈஸ்வரன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோரும் பங்கேற்றனர்.


தே.மு.தி.க.வுக்கு–14 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு–8, பா.ம.க.வுக்கு–8, ம.தி.மு.க.வுக்கு–7 தொகுதிகள், மற்றும் ஐ.ஜே.கே., கொங்குநாடு கட்சி, ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள்  ஒதுக்கப்பட்டது. 

ad

ad