புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வரக் கோரி சென்னையில் ரெயில் மறியல்
 


ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை
ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மங்களூர் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட்கோஸ்ட் ரெயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்தவாறு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
மறியலில் ஈடுபட்ட ராமகிருஷ்ணன், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட நிர்வாகிகள் குமரன், பரந்தாமன் உள்ளிட்ட 65 பேர் கைது செய்யப்ப்டனர். போலீசார் அவர்களை சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
முன்னதாக ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறிய தாவது:–

வருகிற 28–ந்தேதி அமெரிக்கா கொண்டு வரப்படும் தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல. இலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். சர்வதேச விசாரணைக்கு ராஜபக்சேவை உட்படுத்த வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ad

ad