புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014


திமுக – தேமுதிகவினர் மோதல்-தப்பியோடிய சுதீஷ்!நூலிலையில் தப்பிய உமாராணி
  சேலம் பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள பெரிய பள்ளிவாசலான   ஜும்மா மசூதியின் வாசலில்  வாக்கு சேகரிக்க வந்தார் தே.மு.தி.க சேலம் வேட்பாளர் சுதீஷ். சில நொடிகளில்
அங்கு தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜூம் வந்தார்.  அப்போது சுதீஷை பார்த்த உமாராணி செல்வராஜ் நாகரீகம் கருதி சிரித்து வாழ்த்து சொன்னார். சுதீஷும் தி.மு.க வேட்பாளர் தோளை அரவணைத்து ‘நன்றி அக்கா’ என்றார். அங்கு இரு கட்சி கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


அந்த நேரத்தில் தே.மு.தி.க வை தாக்கிவிட்டனர் என தகவல் பரவ,  தே.மு.தி.க வினரோ தாங்கள் கொண்டு வந்த கொடியின் பிளாஸ்டிக் பைப்பால் தி.மு.க வினரை தாக்க அவர்களும் பதிலுக்கு தாக்கினர்.
இந்நிலையில் ஒரு பைப் தி.மு.க வேட்பாளரின் வயிற்றில்  குத்தும் வேகத்தில் வர கண நேரத்தில் உடன் பிறப்புகள் உமாராணியை காப்பாற்றி காரில் அனுப்பி வைத்தனர். மறுபுறம் சுதீஷையும் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாம் தி.மு.க வேட்பாளர் உமாராணி செல்வராஜிடம் பேசினோம். ‘என்ன நடந்ததுனே தெரியல. திடீர்னு தள்ளு முள்ளு ஏற்பட்டது. என்னை தள்ளிவிட்டனர். கொடி வைத்திருக்கும் பைப்பால் தே.மு.தி.க வினர் என்னை குத்த,நிலை குலைந்தேன். அந்நேரம் எங்கள் கழக உடன்பிறப்புகள் என்னை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்’ என்றார் பீதி குறையாமல்.

இரு கட்சி கலகத்தால் அந்த இடமே பதட்டமானது.

ad

ad