புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014




பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்

டெல்லியில் நேற்று பாரதீய ஜனதா பாராளுமன்ற குழு கூட்டமும், மத்திய தேர்தல் குழு கூட்டமும் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மராட்டியம், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியின் 5–வது வேட்பாளர் பட்டியில் வெளியானது. இதில் 67 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
வதோதராவில் நரேந்திரமோடி போட்டி
குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இரு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, அவர் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள வதோதரா பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
மூத்த தலைவரான அத்வானி, தனது சொந்த தொகுதியான குஜராத் மாநிலம் காந்தி நகரில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மதுராவில் ஹேமமாலினி
பிரபல நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஹேமமாலினி உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தற்போதைய எம்.பி.க்களான பிரிஜ்பூஷண் சரண் சிங் கைசர்கஞ்ச் தொகுதியிலும், ஜெகதாம்பிகா பால் தோமரியாகஞ்ச் தொகுதியிலும், முன்னாள் மந்திரி சவுத்ரி பாபுலால் பதேபூர் சிக்ரி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் (தனி) தொகுதிக்கு தற்போதைய எம்.பி. அர்ஜுன் மேக்வாவும், ஜெய்ப்பூர் ரூரல் தொகுதிக்கு ஒலிம்பிக் வீரர் ராஜவர்தன் சிங் ரத்தோரும், தாசா (தனி) தொகுதிக்கு முன்னாள் டி.ஜி.பி. ஹரிஷ் மீனாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சட்டசபை தேர்தல்
மேலும் ஒடிசா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், அருணாசலபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ad

ad