புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

 பூசா முகாமில் ஜெயக்குமாரியை செஞ்சிலுவை சங்கத்தினர் பார்வையிட்டனர் 
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயக்குமாரியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றும் இன்றும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியின் நலன் பற்றி இதன்போது அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரி மற்றும் ஏனைய கைதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சந்திக்க முடியும் என நேற்று ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி, தர்மபுரத்தைச் சேர்ந்த விதவையான ஜெயக்குமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
ஜெயக்குமாரியை பூஸா முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. விபூசிகாவை சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கையில் ஒப்படைத்தனர்.
வடமாகாணத்தில் காணாமற் குடும்பங்கள் நடத்திய போராட்டங்களில் ஜெயக்குமாரியும் சிறுமி விபூசிகாவும் தீவிரமாக கலந்து கொண்டு குரல் கொடுத்திருந்தனர்.

ad

ad