புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

 மலேசியா விமானத்தை கடததியவர்களோடு  ரகசிய பேச்சில் தோல்வி கண்டுள்ளது மலேசியா . வெளியே சொல்லாமல் நாடகம் ஆடுகிறது 
எமது இணையம் விமானம் கட்டத்தபட்டுள்ளதாக மலேசிய பெண் ஊடகவியலாளர் ஒருவரின் செய்தியை மேற்கோள் காட்டி 2 ஆம் நாளே செய்தி  சொல்லி இருந்தது.  கோலாலம்பூரில்ரகசியமாய்  நடைபெற்ற பெரிய
வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்ட சீனாவின் பெரிய 4 வர்த்தக புள்ளிகள் அந்த விமானத்தில் இருந்தார்கள்.விமானி எதிர்கட்சி தலைவரின் உறவினர் ,மலேசிய அரசு பேசி கொண்டே வெளியே சொல்லாமல் நாடகமா அல்லது வேறு பெரிய நாடுகளும் உடந்தையா .
கடந்த 8-ம் தேதி MH370 என்ற மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் செல்லும் வழியில் மாயமானது. இதுவரை அந்த விமானத்தை பற்றி துப்பு கிடைக்கவில்லை என மலேசிய அரசு சொன்ன பதிலை மட்டும் திருப்பி திருப்பி கூறிவருகின்றது. ஏனைய நாடுகள் இதுதான் சந்தர்ப்பம் என கூறி விமானம் அங்குள்ளது, இங்குள்ளது என்று மற்ற நாட்டின் எல்லைக்குள் புகுந்து நாசவேலையில் ஈடுபட்டு ரகசியங்களை அறிய திட்டம் தீட்டியுள்ளது.
உண்மையில் விமானம் எங்கு இருக்கிறது என்பதை மலேசிய அரசு நன்கு அறிந்துள்ளது. மலேசிய அரசு விமானம் கடத்தியவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததால் தான் கடத்தல்காரர்களிடம் இருந்து பயணிகளை மீட்க முடியவில்லை என தற்பொழுது மலேசிய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யார் கடத்தியுள்ளனர், எதற்காக கடத்தியுள்ளனர், அவர்களின் கோரிக்கை என்ன என்பதை பற்றி இன்னும் முழுவிவரங்கள் தெரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல இதற்கு மேல் இந்த விசயத்தை மலேசியாவால் மூடிமறைக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் காணமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியும் அதில் பயணம் செய்த சில பயணிகளின் செல்போன்கள் இயக்கத்திலேயே இருந்துள்ளது. விமானம் கடலில் விழுந்திருந்தால் கண்டிப்பாக மொபைல் போன்களுக்கு நெட்வொர்க் கிடைத்திருக்காது. விபத்துக்குள்ளாக போகும் விமானத்தின் விமானி தகவல் தெரிவிக்காமல் தனது பாதையை மூன்று முறை மாற்றி அமைக்க வாய்ப்புக்கள் இல்லை. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட MH370 விமானம் தடயமே இல்லாமல் விபத்துக்குள்ளவதற்கு சாத்திய கூறுகள் மிக மிக குறைவு.
விமானம் விபத்து அடைந்திருக்காது என உலக நாடுகள் அனைத்தும் நன்கு அறிந்து கொண்டே அதை கடலில் தேடுவது என்பது வேடிக்கையான விஷயமாக உள்ளது. மற்ற நாடுகள் தங்களுக்கு தேவையான எதோ ஒரு இலக்கை அடைய இந்த விமான விபத்தை நன்கு பயன்படுதிக்கொண்டுள்ளது. சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே காணமல் போன விமானத்தை இந்திய பெருங்கடலில் இருக்கிறது என கூறி மற்ற நாடுகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்று வருகின்றனர். மலேசிய அரசும் உண்மையை வெளியில் சொல்லாமல் மற்ற நாடுகளுக்கு உதவி புரிந்து வருகின்றதா? என சந்தேகத்தை எழுப்பியுள்ளது. உண்மையிலே விமானம் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதா அல்லது அரசியல்வாதிகளே ஒளித்து வைத்துகொண்டு நடக்கம் ஆடுகின்றார்களா? என தெரியவில்லை.
ஆனால் இதற்கு கண்டிப்பாக பெரிய பின்விளைவுகளை சந்திக்க போவது இந்தியா தான் என்பது உறுதியாக தெரிந்துள்ளது. இந்தியாவின் ராணுவ நடவடிக்கைள் மற்றும் தொழில்நுட்பங்களை  ஏற்கனவே அமெரிக்க விமானங்கள் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டு நன்கு நோட்டமிட்டு வருகின்றனர். சீனாவும் இந்திய எல்லைக்குள் நுளைய முயற்சித்து தோல்வியை தழுவியுள்ளது. இன்னும் எத்தனை நாளைக்கு தான் விமானத்தை தேடிக்கொண்டே இருக்கப் போகிறார்கள் என தெரியவில்லை.
ஆனால் விமானம் என்ன ஆனது என்பதை வெளியில் சொல்லாமல் காப்பீட்டு தொகையை வழங்கி வருகின்றனர். மக்களின் போராட்டம் வெடிக்காமல் இருப்பதற்கே இந்த காப்பீட்டு தொகை நாடகம் என கூறுகின்றனர்.

ad

ad