புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மார்., 2014

ஜெனீவா ஐ நா முன்றலில்இன்று நடைபெற்ற  விபூசிகாவை விடுவிக்க கோரும்  ஒன்றுகூடல் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் நடக்கும் சூழ்நிலையில் இலங்கையில் நடைப்பெற்று வரும் கைதுகளை குறிப்பாக விபூசிகா, ஜெயகுமாரி, பொய் குற்றாச்சாட்டில் தமிழர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் ஐ.நா.முன்றலில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழரின் இனஅழிப்பிற்கு நீதி கேட்டும் தமிழருக்கெதிரான ஆக்கிரமிப்புப் போரை நிறுத்தக்கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக்கோரியும் இன்று தொடர் போராட்டங்கள் இடம்பெற்றன.
தாயகத்தில் இடம்பெறும் கைதுகளை நிறுத்துவதோடு, இதுவரை கைது செய்யப்பட்ட சிறுமி, தாய், கர்ப்பிணிப்பெண், குடும்பத் தலைவர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய சிறிலங்காவை வற்புறுத்தக் கோரியும் இன்று ஜெனிவா ஐ.நா. முன்றலிலும் மற்றும் யேர்மனி Düsseldorf நகரில் மற்றும் பிரித்தானியா தூதரகத்துக்கு முன்னாலும் நீதிகேட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.
தமிழீழப் பிரதேசமெங்கும் இளைஞர்கள் கடத்தல், இனந்தெரியாப் படுகொலைகள், இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமல்போன மக்களின் உறவினர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது செய்து தடுத்துவைக்கப்படுதல்,
முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் பெருமெடுப்பிலான கைதுகள், புலிதேடும் சிங்களப் படைகள், நிற்கின்றபோது குறிப்பாக யாழிலிருந்து தென்தமிழீழம் நோக்கிப் பயணித்த இளம் குடும்பப் பெண் காணாமல் போதல் உட்படப் பெண்கள் காணாமல் போதல், தமிழ் பெண்களை சிறிலங்கா இராணுவத்தில் இணைத்து இராணுவத் தளபதிகளாலும் சிப்பாய்களாலும் பாலியல் வன்கொடுமை ஊடாக கேவலப்படுத்துதல்,
படுகொலை செய்தல், இளைஞர்களின்மீது இராணுவ வண்டியால் மோதி படுகொலை செய்தல், அப்பகுதியில் கூடிநின்ற மக்கள் மீது வன்முறைத் தாக்குதலை மேற்கொள்ளல் போன்ற மனிதவுரிமை மீறல்களையும் மானுடம் வெறுக்கும் செயல்களையும் சிங்களப் பேரினவாதிகள் வெளிப்படையாகவே செய்து வருகின்றனர்.
அந்த வகையில் புலம் பெயர் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்கள் ஊடாக இனத்தின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்த தொடர்ந்து துணிந்து போராடுவோம், மீண்டும் மீண்டும் போராடுவோம் என்று உறுதியெடுத்தனர்.

ad

ad